பிரான்சில் இஸ்லாமிய பெண்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு!பிரான்சில் கேன்ஸ் நகரை அடுத்து ரிவைரா கடற்கரைப் பகுதி ரிசார்ட்டுகளும் முழு நீள நீச்சலுடை அணிய இஸ்லாமிய பெண்களுக்கு தடை விதித்துள்ளது.
இந்த தடை உத்தரவு குறித்து விளக்கமளித்துள்ள நகரின் மேயர் லியோனல் லூக்கா, கடற்கரையில் முழு நீச்சல் உடையுடன் ஜோடி ஒன்று நீச்சலடித்து வருவதாக தகவல் வந்துள்ளது. சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், குறிப்பிட்ட முழு நீள நீச்சல் உடைகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேப்போன்று தடை விதித்துள்ள கேன்ஸ் நகர மேயர், நல்ல பழக்க வழக்கங்களுக்கு மரியாதை அளிப்பதுடன் மதச்சார்பின்மையை வலியுறுத்தவே தாம் முழு நீள நீச்சல் உடைக்கு தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் திடீரென்று இஸ்லாமியர்கள் மீது குறிவைத்து தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது மிகவும் வருந்தத்தக்க செயல் என இனவாதத்திற்கு எதிராக செயல்படும் அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் கொண்டு செல்லவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே Merseille நகரில் முழு நீள நீச்சல் உடை அணிபவர்களை வரவழைத்து நடத்தப்படுவதாக இருந்த கூட்டம் ஒன்று, அமளி ஏற்பட்டதை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரான்சில் சமீப காலமாக நடத்தப்படும் தாக்குதல்கள் அனைத்தும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் ஆதரவால் அரங்கேற்றப்படுவதால், இந்த விவகாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன.

குறிப்பிட்ட மதத்தினரால் மட்டுமே பயன்படுத்தப்படும் முழு நீள நீச்சல் உடையால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் வந்துவிட கூடாது என்பதை கருத்தில்கொண்டே தாம் அந்த வகை உடைகளுக்கு தடை விதித்ததாக மேயர் லூக்கா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 14 ஆம் திகதி ரிவைராவின் நைஸ் நகரில் தீவிரவாத ஆதரவு நபரால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 85 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

மட்டுமின்றி ஜூலை 26 ஆம் திகதி பாதிரியார் ஒருவர் காவிலுக்குள் வைத்தே கொல்லப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பொது இடங்களில் முகத்திரை அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மத ரீதியான ஆடைகளோ அடையாளங்களோ அணிந்துகொள்ள தடை எதுவும் விதிக்கப்படவில்லை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.