சுப்பிரமணி சாமி ஏன் இஸ்லாத்தை எதிர்க்கின்றார் ... ?

சுப்பிரமணி சாமி ஏன் இஸ்லாத்தை
எதிர்க்கின்றார் ... ?
தன் வீட்டில் இஸ்லாம் வளர்கின்றதை கண்டு
விரக்தியில் எதிர்க்கின்றாரா ?
கொடூங்கோலன் ஃபிர்ரவுன் வீட்டில் முஸா (அலை)
அவர்களை வளர செய்ததை போல ..
பாருங்கள் இந்த விடியோவை ...
பாரம்பரிய பிராமண குடும்பத்தில் பிறந்த நீங்கள் எப்படி இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் ஆதரிக்கிறீர்கள் என நெறியாளர் கேட்டதற்கு அவர் கொடுத்த பதில்கள் யாரை கலங்கடிக்கிறதோ இல்லையோ சுப்பிரமணிய சுவாமியையும் , இந்துத்துவா வாதிகளையும் உலுக்கி இருக்கும் ..
என் தந்தை உட்பட வீட்டில் உள்ளவர்களுக்கு பூஜை புணஸ்காரங்களில் அதிகம் ஈடுபாடு உண்டு இருந்தாலும் எனக்கு இஸ்லாத்தின் மீது அதிகம் ஈர்ப்பு ஏற்ப்பட்டதிற்க்கு
அல்லாஹ்வே காரணம் ( தான் நாடியவரை நேர்வழி செலுத்துவேன் தான் நாடியவரை வழிதவற செய்வேன் என்பது போல
- அல் குர் ஆன் ) ...
நான் ஒரு ஹதிஸ் டி.வி களில் கேட்டேன் உருவத்தாலோ , உயர் குலத்தாலோ , யாரும் உயர்ந்தவர் இல்லை யாருடைய உள்ளம் விசாலமாகி இருக்கின்றதோ அவரே உயர்ந்தவர்
என்ற ஹதிஸை என்னுடன் ஒப்பிட்டு பார்த்தேன் ..
எனக்கு உருது மொழி மீது அதிகம் ஈடுபாடு உண்டு .. அந்த அடிப்படையில் நான் அடிக்கடி முஷராக்களுக்கு (கவிதை அரங்கம்) செல்வேன் அங்கு பல முஸ்லீம்கள் வருவார்கள் அவர்களிடம் பழகும் போது அன்பு , பாசம் , கணிவு , கலந்த பேச்சுகள் என்னை கவர்ந்தது இவர்களையா தீவிரவாதிகள் , பயங்கரவாதிகள் , இவர்களுடன் பேச கூடாது , பழக கூடாது என நம்மை தடுக்கின்றார்கள் என கவலை என்னை ஆட்கொண்டது ...
குர்-ஆன் வசனத்தை கவிதையாக முஷராக்களில் பாடினார் ஒரு பெண் (குதா) யாரை காப்பாற்ற நினைத்தாலும் சிலந்தி வலையை கேடயமாக கொண்டு காப்பாற்றுவான் , யாரை உயர்த்த நினைக்கின்றானோ அவரை கடலையே பிளந்து வழி கொடுப்பான் , யாருடைய உயிரை எடுக்க நினைக்கின்றானோ கொசுவை கொண்டே உயிரை பரிப்பான் ...
இஸ்லாத்தின் மீது தவறான கருத்துகள் திணிக்கப்படுகிறது, உலகம் முழுவதும் தவறான நம்பிக்கையை விதைத்து இருக்கிறார்கள் .
நான் அதை மாற்ற துடிக்கிறேன், உலகம் முழுவதும் மாற்ற முடியாது என்றாலும் என் வீதியில் இருந்து , என் சுற்றுப்புறத்திலிருந்து மாற்ற போராடுகிறேன்.
ஆரம்பத்தில் இஸ்லாமியர்களுடன் பழக வேண்டாம் என பல உறவினர்களும், தோழிகளும் கூறினார்கள், அவர்கள் கெட்டவர்கள், தீவிரவாதிகள் என கூறி பயந்தார்கள், அவர்கள் பயத்தை மாற்றினேன்.
தற்போது அவர்களே இஸ்லாத்தை விரும்பி படிக்கிறார்கள், புத்தகங்களை கேட்கிறார்கள், ஆலோசனை கேட்கிறார்கள். அவர்களுக்கும் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை பிறந்தது.
இஸ்லாம் மிக அமைதியான மார்க்கம், அன்பான மார்க்கம், அழகான மார்க்கம், தூய்மையான மார்க்கம் இதை படிக்க ஆரம்பித்தால் அதை படிப்பவர்கள் அதில் ஒன்றிப்போய், இஸ்லாம் இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்றார் சுஹாசினி ...
சுப்பிரமணி சாமி மகள் சுஹாசினி
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.