பீகாரில் பதற்றம்: கடைகள் உடைப்பு, வீட்டிற்கு தீவைப்பு
பீகார் மாவட்டத்தில் சப்ரா பகுதியில் இந்துக் கடவுள்களை அவமதித்து ஃபேஸ்புக் பதிவு ஒன்றை முஸ்லிம் இளைஞர் ஒன்று பதிந்ததாக கூறி பஜ்ரங்தள் அமைப்பு கலவரத்தில் ஈடுபட்டுள்ளது . முஸ்லிம்களின் கடைகள் வர்த்தக நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பெங்களூரில் உள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சுமார் 200 பேர் முன்னாள் எம்.எல்.ஏ. உதித் ராய்யின் தலைமையில் கடையடைப்பு நடத்தக்கோரி ஊர்வலம் சென்றுள்ளனர். இதன் பின்னர் நகர் பலிகா சவுக் பகுதியில் உள்ள மக்களையும் தங்களுடன் ஊர்வலம் வர அழைத்துள்ளனர். இது நடைபெற்ற முழு நேரமும் காவல்துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
பல மாவட்டங்களில் சனிக்கிழமை முழு கடையடைப்பு கடைபிடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் உட்பட கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து கவுஸ் முஹம்மத் என்பவர் கூறுகையில், தேவையில்லாத மோதல்களை தவிர்க்க பல முஸ்லிம்களும் தங்கள் கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களை அடைத்துள்ளனர் என்று கூறியுள்ளார். சிறுபானமையினர் அதிகம் வசிக்கும் பகுதியான கணுவா பகுதியில் கடையடைப்பு நடந்து சில மணிநேரங்களில் சிறு கடைகள், டி கடைகள் திறக்கப்பட்டது. இது பஜ்ரங்தள் அமைப்பினற்கு உறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து சில இடங்களில் துப்பாக்கிச் சூடும், நாட்டு வெடி குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. இந்த மோதலில் பலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சுமார் 2000 பேர் கலவரத்தில் ஈடுபட்டனர். ஹதுவா, டின்குனியா, மற்றும் சாஹேப்கஞ் பக்குதிகளில் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது. பல கடைகள் சூறையாடப்பட்டது. டின்குனியா பகுதியில் உள்ள மசூதி ஒன்றும் சூறையாடப்பட்டுள்ளது. பள்ளிவாசல்ன் கதவுகள் எரிக்கப்பட்டுள்ளன. அதனை சுற்றியுள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான 10 கடைகளுக்கும் மேல் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது எதையும் காவல்துறை தடுக்க எந்த முயற்சியும் மேற்க்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.