இராமநாதபுரத்தில் ஒரு பிதாமகன்....சமூக சேவகர் அமீர் ஹம்சாஇராமநாதபுர மாவட்ட ஆட்சியர் இராமநாதபுர பிதாமகன் என்று அழைக்கப்படும் அமீர் ஹம்சாவுக்கு சமூக சேவகர் விருது வழங்கி கெளரவித்தார்.அமீர் ஹம்சாவின் அனாதை பிணங்களை அவர்களுடைய வழக்கப்படி அடக்கம் செய்வது.அதுமட்டுமல்லாமல் கிணற்றில் இறந்தவர்கள்,தூக்கிட்டு இறந்தவர்கள்,சாலை விபத்தில் இறந்தவர்கள்,கடல்,குளங்களில் இறந்த 15000 மேற்ப்பட்டோர்களை அவரது சொந்த செலவில் அடக்கம் செய்கிறார்.காவல்துறையினரோ,தீயணைப்பு துறையினரோ மீட்க முடியாத உடல்களை இவர்தான் மீட்டு வருகிறார்,சமீபத்தில் கூட பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தையை கண்மாயில் வீசிவிட்டு சென்று விட்டனர் அந்த அழிகிய உடலை தீயணைப்பு துறையினர் தொட்ட உடன் உடல் தனித்தனியாக பிரிந்த உடலை உடனடியாக அமீர் ஹம்சா கூடையுடன் வந்து அந்த உடலை மீட்டார்.
 இதே போல் இவரது பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.யார் எங்கே இறந்தாலும் உடனடியாக அமீர் ஹம்சாவே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு உடலை அடக்கம் செய்து வருகிறார்.
இராமநாதபுரம் சின்னக்கடை, அருப்புக்காரத்தெருவை சேர்ந்தவர் அமீர் அம்சா

நன்றி : பாலாஜி
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.