அதிரையை ஆட்டிப்படைத்த கொள்ளையர்கள் கைதா ? அதிரையில் பரபரப்பு
கடந்த சிலநாட்களாக அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளையர்களின் கைவரிசை அதிகரித்து வந்தது. இதனை தொடர்ந்து  சில தினங்களுக்கு முன்னர் டைனமிக் செல்கடையை அடுத்து அம்பிகாஎலக்ட்ரிக்கல்ஸ், ஆயிஷா பேபிஸ்ஷாப் ,செலக்ஷன் மளிகை ஆகிய கடைகளில் கைவரிசையை காட்டிய பலே திருடனை பிடிக்க ஏஎஸ்பி ஆனந்த் மேனன் உத்தரவில் தனிக்குழு அமைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தஞ்சையிலிருந்து வந்த  கரிகாலன் என்ற மோப்ப நாய் சம்பவம் நடந்த கடையில் இருந்து கொஞ்ச தூரம் ஓடி ஒரு சந்தேகத்துக்குரிய எல்லையில் நின்றது.

இதனை அடுத்து சுதாரித்த அதிரை காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகத்திற்கு உரிய நபர்களை கண்காணித்தனர்.

இந்நிலையில் இன்றுமாலை சதேகத்தின் பேரில் நல்லவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதில் ஒரு குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இருப்பினும் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்றுவருவதாக தெரிகிறது .
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.