பாகிஸ்தானில் இந்து திருமண சட்டம் 
பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்துக்களின் திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கும், இந்து திருமணச் சட்ட வரைவு மசோதாவுக்கு, சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நிலைக்குழு கடந்த பிப்ரவரி மாதம் தனது ஒப்புதலை வழங்கியது.
இதைத் தொடர்ந்து, நிலைக் குழுவின் பரிந்துரையுடன், தேசிய சபையில் நேற்று முன்தினம் இம் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய சபையில் இம்மசோதா தாமதமாக வந்தாலும், ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் ஆதரவு உள்ளதால், இம் மசோதா எளிதில் நிறைவேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரைவு மசோதாவில், கணவர் இறந்துவிட்டால், ஆறு மாதத்துக்குப் பிறகு மனைவி இரண்டாம் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும், 17-வது பிரிவு மற்றும் விவாகரத்து உள்ளிட்டவை தொடர்பான, 12, 15 ஆகிய பிரிவுகளுக்கு இந்து சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். எனினும், பாகிஸ்தானில் மணமான இந்து பெண்கள் கடத்தப்படுவது மற்றும் கட்டாய மதமாற்றம் போன்றவை இச்சட்டத்தின் மூலம் தடுக்கப்படும் என கருதப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.