பட்டுக்கோட்டையில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம் ! ஒட்டகம் அறுக்க தடையை கண்டித்து வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலைக் கண்டித்து, பட்டுக்கோட்டையில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம் !

வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலைக் கண்டிக்கும் வகையில் தமுமுக சார்பாக கண்டன ஆர்பாட்டம் பட்டுக்கோட்டையில் இன்று மாலை நடைபெற்றது.

முஸ்லிம்களின் தியாக திருநாளான ஹஜ் பெருநாள் அன்று ஒட்டகம் அறுக்க தடை விதித்து, வழிபாட்டு உரிமையை பறிக்கும் அநீதியை கண்டித்து, தமுமுக சார்பில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே பெருந்திரள் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை அஹமது ஹாஜா தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் ஏர்வாடி ரிஜ்வான் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.  பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

முன்னதாக மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எம். கபாஃர் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் டாக்டர் உமர் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி, ஆவணம், மல்லிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமுமுக, மமகவினர் பலர் கலந்துகொண்டனர்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.