இறைவனின் திருப்பெயரால் இந்தியச் சுதந்திரமும் புதைக்கப்பட்ட சில உண்மைகளும்
இறைவனின் திருப்பெயரால்

   இந்தியச் சுதந்திரமும் புதைக்கப்பட்ட சில உண்மைகளும்

 இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தன்னுடைய உழைப்பால், பொருளால், உயிரால் தியாகம் செய்த மக்கள் ஏராளம் இருக்கிறார்கள். ஆனால் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி உங்களுக்கு தெரிந்த நபர்களை சொல்லுங்கள் என்று நம்மிடம் கேட்டால், உடனே நாம் மகாத்மா காந்தி, நேருஜி, நேதாஜி, வ.உ.சி, வீரபாண்டிய கட்ட பொம்மன் ... என்று சொல்லி விடுவோம்.

 ஆனால் யாருடைய வாயிலிருந்தும் ஒரு முஸ்லிம் தியாகியின் பெயர் கூட வருவதில்லை காரணம் "முஸ்லிம்களுக்கும் சுதந்திரத்திற்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை" என்ற விஷமக்கருத்தை ஒட்டு மொத்த இந்திய மக்களின் உள்ளங்களிலும் பதித்து விட்டார்கள் காவி பார்ப்பன கூட்டங்கள்.

தற்போது வாழும் முஸ்லிம்களுக்கு கூட "நாம் உண்மையிலேயே இந்த நாட்டு விடுதலைக்காக பாடு பட்டிருக்கிறோமா"
என்று சந்தேகப்படக்கூடிய அளவிற்கு வரலாற்றை மாற்றி அமைத்து விட்டார்கள் பாவிகள்.

  "உண்மை வரலாறு என்ன தெரியுமா?"

வரலாற்று ஆசிரியர் குஷ்வந்த் சிங் கூறுகிறார்

 இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும், உயிர் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் தான் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்.

(ஆதாரம் - இல்லஸ்டிரேட் விக்லி 27-12-1975)

தெரிந்து கொள்வோம்

 இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட,போராட்டத்திற்கு உதவிய பல்லாயிரக்கணக்கான  முஸ்லிம்களில் சிலரை...

 முதல் இந்திய சுதந்திர போராட்டமான (1857)வேலூர் சிப்பாய் புரட்சியை தலைமை தாங்கி நடத்தியவர் அப்துல்லாஹ் ஷா.

 இறைவழிபாட்டுத் தலங்களை ஆங்கிலேயனை துறத்தியடிக்கும் பிரச்சாரக் களமாக மாற்றியவர்கள் முஸ்லிம்கள். குண்டுகள் பாய்ந்து இரத்தக்கரை படிந்த பள்ளிவாசல் ஹூனி மஸ்ஜித், உத்திரப்பிரதேச மாநிலம் தேவ்பந்த்.

 நேதாஜியின் ரானுவப்படை உருவாக்க அன்றே கோடி ரூபாய் தந்தவர் வள்ளல் ஹபீப் முஹம்மது, அதன் தளபதி ஷாநவாஸ் கான்.

 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி க்கு அன்றே இரண்டு லட்சம் ரூபாயை தந்தவர் பக்கீர் முஹம்மது ராவுத்தர்.

  காந்தியின் ஒத்துழையாமை இயக்க அழைப்பை மதிக்காமல் எல்லோரும் ஆங்கிலேயரின் படிப்பை படித்து பட்டம் பெற்ற போது அதை தூக்கி எறிந்தவர் மரியாதைக்குரிய காயிதே மில்லத் அவர்கள்.

 கொடி காத்த குமரனோடு சேர்ந்து கொடி பிடித்த தியாகிகள் அப்துல் லத்தீப், அக்பர் அலி, மெய்தீன், அப்துல் ரஹீம், வாவு சாயிப், ஷேக் பாபா சாயிப் ஆகியோர்

 வெள்ளையனை ஏவுகனை கொண்டு தாக்கி துறத்தியடித்தவர் மைசூர் புலி மாவீரன் திப்பு சுல்தான்

  ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து அவர்களை கதிகலங்க வைத்தவர் கான் ஸாஹீப் (மருத நாயகம்)

  இவையெல்லாம் ஏதோ கட்டுக்கதைகள் அல்ல.புதைக்கப்பட்ட முஸ்லிம் விடுதலை போராளிகளின் உண்மை வரலாறுகள்.

 இது மட்டுமல்ல இப்படி இன்னும் ஏராளமான போராளிகள், சுதந்திர போராட்ட தியாகிகள் என சுதந்திர வேட்கையின் வரிசைகளில் நிறைந்து காணப்படுகிறார்கள்...

ஆனால் இதையெல்லாம் கட்டுக்கதையாக்கி,உண்மை வரலாற்றை மறைத்து விட்டார்கள்...

இதையெல்லாம் நாம் உணர்ந்து நம் சந்ததிகளுக்கு கொண்டு செல்வோம் உண்மை வரலாற்றை ...., உரக்கச் சொல்வோம் உலகிற்கு.. ...

தகவல்
மு பக்கீர் முகைதீன் நாச்சிகுளம்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.