பசுக்களை கடத்தியதாக கூறி பா.ஜ.க தொண்டரை அடித்துக் கொன்ற வி.ஹச்.பி. மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர்கர்நாடகா மாநிலம் உடுப்பி அருகே உள்ள சந்தேகட்டே பகுதியில் பிரவீன் பூசாரி மற்றும் அவரது நண்பரான அக்ஷய் தேவடிகா ஆகியோர் பிரவீன் பூசாரிக்கு சொந்தமான டெம்போ ஒன்றில் இரண்டு பசுக்களை ஏற்றிச் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த வி.ஹச்.பி. மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் இவ்விருவர் சென்ற டெம்போவை வழிமறித்து இருவரையும் பலமாக தாக்கியுள்ளனர். சுமார் 35 ஈடுபட்ட இந்த தாக்குதலில் பிரவீன் பூசாரி உயிரிழந்துள்ளார். அக்ஷய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த புதன் இரவு நடைபெற்ற இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 17 பேரை கைது செய்துள்ளது ஹெப்ரி காவல்துறை. மற்றவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் இந்த தாக்குதலை வி.ஹச்.பி.யை சேர்ந்த அரவிந்த் ஷேரிகர் என்பவர் துவங்கிவைத்தார் என்று கண்டறியப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.