துருக்கியில் ஜனாதிபதிக்கு ஆதரவாக ஓன்று கூடிய சுமார் ஐம்பது லட்சம் பேர் - துருக்கியின் வரலாற்றில் மிகப்பெரிய பேரணி??கடந்த மாதம் 15ஆம் தேதி  அன்று துருக்கியில் ராணுவ சர்வாதிகாரத்தின் ஆட்ச்சியை பிடிக்கும் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து துருக்கியில் பல்வேறு பகுதிகளில் ஜனாதிபதி எர்தோகானுக்கு ஆதரவாகவும் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் பல பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.. இதன் ஒருபகுதியாக துருக்கி வரலாற்றின் மிகப்பெரிய பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஜனாதிபதி ஏதோகான் அழைப்பு விடுத்திருந்தார் . இந்த பேரணிக்கு நாட்டை ஆளும் கடசியான ஏகேபி உள்ளிட்ட அனைத்து முக்கிய கட்சிகளும் ஆதரவு அறிவிப்பை வெளியிட்டன..
எதிர்பார்க்கப்பட்டதை போலவே இஸ்தான்புல் நகரில் மக்கள் வெள்ளமாக காட்ச்சியளித்தது.. சுமார் 50 லட்சம் மக்கள் பங்கேற்றதாக துருக்கி பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.. கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பாதுகாப்பு பணியில் பல ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.. சுமார் 700 மருத்துவர்களும் , நூற்றுக்கணக்கான ஆம்புலன்சுகளும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தன.. மேலும் சில வாரங்களுக்கு முன்னர் வெடிகுண்டு தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டதால் பாதுகாப்பு கருதி பேரணிக்கு வரும் மக்களின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டே அனுமதிக்கப்பட்டனர்..
திருக்குரான் வசனம் ஓதப்பட்டு துவங்கப்பட்ட கூட்டத்தில் ராணுவ சர்வாதிகாரத்தால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடி படுகாயமடைந்த சிலரும் அன்று நிகழ்ந்த நிகழ்வை நினைவூட்டினார்.,. ஏதோகான் உள்ளிட்ட தலைவர்களும் துருக்கி மக்களின் வலிமையை ராணுவ சர்வாதிகாரத்தை முற்றிலும் ஒழிப்போம் என்பதை பற்றி தீர்க்கமான கருத்தை வெளியிட்டனர்.. துருக்கி வரலாற்றில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் நின்று பங்கேற்ற மிகப்பெரிய நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது..
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.