தேவை ஹலால் அறுப்பகங்கள்: ஒட்டகம் வெட்ட தடையல்லஒட்டகம் வெட்ட வசதி இல்லை” என்ற காரணத்தை கூறி நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து நமது இயக்கங்கள் வீதியில் இறங்கி போராட்டம் செய்வது ஒரு புறமிருக்கட்டும்.

முஸ்லிம் அமைப்புகள் ஆக்கபூர்வமாக, சட்ட ரீதியாக செய்யவேண்டியது என்ன? முஸ்லிம்கள் வசிக்கும் எல்லா ஊர்களிலும் ஹலால் முறையில் ஆடு, மாடு, ஒட்டகம் அறுப்பதற்கான போதுமான நவீன வசதிக் கூடங்கள் அரசு செலவில் ஏற்படுத்தி தர வேண்டும் எனும் கோரிக்கையை அரசு மற்றும் நீதிமன்றம் வாயிலாக கோரவேண்டும்.

ஹலால் உணவின் பயன்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, பிற சமுதாய மக்களின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானதே. ஹலால் அறுப்பகங்களை சட்ட ரீதியாக அரசு சிலவில் ஏற்படுத்தி தரும் வாய்ப்பினை ஒட்டகம் பிரச்சினை மூலம் நீதிமன்றமே தொடங்கிவைதுள்ளது.

நவீன கழிப்பறை, குடிநீர் வசதி, சுடுகாடு வசதி ஏற்படுத்தித் தரும் இந்த அரசு ஹலால் அறுப்பகங்களையும் அமைத்துத் தரவேண்டும் அல்லவா? வரி செலுத்தும் இந்திய குடிமக்களாகிய நமக்கு இதனை கேட்கும் உரிமை இல்லையா? களமிறங்குங்கள் இஸ்லாமிய அமைப்புகளே!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.