மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரி வர அனுமதி - கேம்பஸ் ஃப்ரண்ட் போராட்டத்தின் எதிரொலிமங்களூரு: ஸ்ரீனிவாசா மருந்தியல் கல்லூரியில் B.Pharm பட்டம் பயிலும் முதல் வருட முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறை, நூலகம், அலுவகலம் மற்றும் தேர்வு அறைக்குள் வருவதை கல்லூரி நிர்வாகம் தடை செய்திருந்தது. மேலும் மாணவர்கள் ஜீன்ஸ் மற்றும் டீஷர்ட்கள் அணிவதையும் அந்தக் கல்லூரி தடை செய்திருந்தது.
கடந்த வியாழக் கிழமை ஹிஜாப் அணிந்து வந்த மாணவி ஒருவரிடம் கல்லூரி ஒழுக்க கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்கள் அவர் ஹிஜாப் அணிந்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை அடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாணவ பிரிவான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கல்லூரி நிர்வாகத்தை அணுகி மாணவிகள் தங்கள் ஹிஜாபை அணிந்துகொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் அந்த கல்லூரி நிர்வாகத்தின் துணைத் தலைவர் ஸ்ரீனிவாச ராவ்வையும் சந்தித்து தங்களது கோரிக்கைகளை முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து கல்லூரிக்கு ஹிஜாப் அணித்து வரும் மாணவிகள் மீது எத்தகைய கட்டுப்பாடும் இனி விதிக்கப்பட மாட்டாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.