மது விற்பனை செய்த பெட்டிக்கடை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!
கரூர் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் மது விற்பனை செய்த பெட்டிக்கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

கரூர் மாவட்டம்,  குளித்தலை  அருகே திருச்சி- தோகைமலை  நெடுஞ்சாலையில் காவலகாரன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனியப்பன் நடந்து கொண்டிருந்தபோது  ஜல்லி ஏற்றிவந்த லாரி மோதி பலியானார்.

இந்த  விபத்துக்கு  அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்யும் அருகில் உள்ள பெட்டிக்கடையே காரணம் எனக் கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த  கடையை  அடித்துநொறுக்கினர். தகவலறிந்த தோகைமலை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பழனியப்பன் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.  விபத்து குறித்து வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை செய்து  வருகின்றனர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.