அரசு பள்ளிக்கு இடம் தானமாக வழங்கிய. அப்துல்கரீம் குடும்பத்தினருக்கு பாராட்டு விழாதிருத்துறைப்பூண்டி கட்டிமேடு ஆதிரெங்கம்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பயன்பாட்டுக்காக ரூ.16 லட்சம் மதிப்புள்ள 28.75 சென்ட் இடத்தை நன்கொடையாக வழங்கிய கட்டிமேடு ஆதிரெங்கம் அப்துல்கரீம் குடும்பத்தினருக்கு  பாராட்டு விழா நடந்தது. கல்விக்குழு தலைவர் அப்துல்முனாப் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சண்முகம், ஊராட்சி துணைத்தலைவர் ராதா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் லதா முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை சாந்தி வரவேற்றார். இடத்தை நன்கொடை வழங்கிய ஹாஜாமைதீன், சையது இப்ராஹிம், சுலைமான், சாகுல்ஹமீது ஆகியோரை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சூசைரெத்தினம் பாராட்டி கல்வெட்டை திறந்து வைத்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.