கொத்தனாருக்கு அடித்த ஒரு மில்லியன் திர்கம் அதிர்ஷ்டம்!துபையில் கொத்தனாராக பணியாற்றும் உத்தரப் பிரதேச மாநிலம், காஜிப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நன்ஹாக்கு யாதவ் என்பவருக்கு 'அல் அன்சாரி எக்ஸ்சேஞ்ச்' என்ற தனியார் பணமாற்று பரிவர்த்தனை செய்யும் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக நடத்திய வருடாந்திர சிறப்புக் குலுக்கலில் இந்தப் பரிசை பெற்றார்.


1,116 திர்ஹத்தை தனது வீட்டு செலவுக்கு கடந்த மாதம் அனுப்பியதை தொடர்ந்து கிடைத்த வாடிக்கையாளர்களுக்கான இலவச கூப்பனே இந்த மில்லியன் திர்ஹத்தை பெற்றுத் தந்துள்ளது. இது அல் அன்சாரி எக்ஸ்சேஞ்ச் தனது வியாபார விளம்பர விரிவிற்காக நடத்தும் மூன்றாம் வருட மில்லியனர் குலுக்கல் ஆகும்.


3 குழந்தைகளின் தந்தையான 36 வயது யாதவ் மாதம் 1300 திர்ஹம் சம்பளத்தில் பணியாற்றி வருபவர் தற்போது பரிசு விழுந்துள்ளதை தொடர்ந்து தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊர் திரும்பிய பின் தனது குழந்தைகளை வாரனாசியில் உள்ள நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்த படிக்க வைப்பதுடன் ஒரு ஷாப்பிங் கம்ப்ளக்ஸ் ஒன்றையும் கட்ட திட்டமிட்டுள்ளார்.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.