விடுதலை புலிகளுக்கும், முஸ்லிம்களுக்கும் ஏற்ப்பட்ட கசப்பான நிகழ்வு
இலங்கையில் விடுதலை புலி இயக்கத்தால் 1990 ஆகஸ்டு 3 காத்தான்ககுடியில் நடத்தப்பட்ட படுகொலைக்கு 26ஆம் ஆண்டு நினைவுதினமும் மற்றும் முதூர் முஸ்லீம்கள் வெளியேற்றபட்டு 10வது  ஆண்டு அனுசரித்த  இலங்கை முஸ்லீம்கள்.
இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், முஸ்லிம்களுக்கும் ஏற்ப்பட்ட கசப்பான நிகழ்வாக பார்க்கப்படும் காத்தான்குடி தாக்குதலும், முதூர் முஸ்லீம்கள் வெளியேற்ற சம்பாவமும்.
1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் இரவு படுகொலைகள் இடம் பெற்ற மீரா ஜும்மா பள்ளிவாசல் , ஹுசைனிய்யா பள்ளி வாயில்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த சிறுவர்கள் , முதியவர்கள் உட்பட 103 முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளின் துப்பாக்கிச் சுட்டிலும் எறிகுண்டு தாக்குதலிலும் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் நினைவாக நேற்று புதன்கிழமை 26வது 'வீரமரண தினம் ' இலங்கை முஸ்லிம்களால் அனுஷ்டிக்கப்பட்டது.
அதேபோல் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி இரவு மூதூர் நகரிலுள்ள இராணுவம் மற்றும் போலீஸ் நிலையங்கள் மீது விடுதலைப்புலிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்த தாக்குதலுக்கு பின்னர் அந்த பகுதி முழுவதும் விடுதலைப்புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டிற்க்கு  வந்தது .
சில  நாட்கள் அந்த பகுதி விடுதலை புளிகல் வசம் இருந்ததாக சொல்லபடுகிறது, அந்நாட்களில் தங்களை வெளியெறுமாறு விடுதலைப்புலிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டதாக முஸ்லிம்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது அந்த சம்பவங்களில் இடம் பெற்ற குண்டு வீச்சில் சிக்கி 54 முஸ்லிம்கள் பலியானதாக உள்ளுர் மக்கள் கூறுகின்றார்கள்.
தனி ஈழ பிரச்சனையில் தீர்வுகாண முடியாமல் போனதற்கு கிழக்கு மாகாணத்தில் அதிகமாக வசிக்கும் முஸ்லீம்கலுக்கும் விடுதலை புலிகளுக்கும் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களாக இது பார்க்கபடுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.