ஒருவரது மரணம் அவரை அறிந்தவர்களுக்கு மிகப்பெரிய இழப்பையே தருகிறதுமுத்துப்பேட்டை சகோதரர் நெய்னா முஹம்மது அவர்களின் மரணம் இவரை அறிந்த சகோதரர்களுக்கு மிகப்பெரிய இழப்பையே தந்திருக்கிறது....

இவரைபற்றி எனக்கு தெரிந்த சில வரிகள்
கடந்த ரமழானுக்கு முந்தைய ரமழானில் எங்களோடு இப்தாரில் கலந்துகொண்டும் மஹ்ரிப் தொழுகையும் நடத்திதருவார் அந்த கிரா அத்தில் நாங்களெல்லாம் சொக்கிப்போவோம் ....
பனி நிமித்தமாக செல்லும் சந்தர்பத்தில் தன்னுடைய சொந்த வேலைக்காகவோ அல்லது அந்த வழியே தம்முடைய நண்பர்கள் இருந்தாலோ அவர்களை காணப்போகுமுன் தன்னுடைய முதலாளியுடைய அனுமதி பெற்றுக்கொள்வார் அதற்க்கு அவர் கூறும் காரணம் அனுமதியின்றி பிறருடைய பொருளை பயன்படுத்துவதை அல்லாஹ் தடுத்திருக்கிரானே! நிகழ்காலத்தில் நான் கண்ட ஒரு சில இறையச்சவாதிகளில் இவரும் ஒருவர்.

இவர் நமக்குமுன் சென்றுவிட்டார்,நாம் பின்னால் செல்ல இருக்கிறோம். செல்வதற்கு முன் மறுமைக்கான சேமிப்பை செய்துகொள்வோம். ஒவ்வொரு வரலாற்றிலும் ஒரு படிப்பினை இருக்கின்றன.இவரையும் ஒரு வரலாறாக நான் எடுத்துக்கொண்டு என்னை செம்மைபடுத்திக்கொள்ளவுமே இப்பதிவு.

இவருக்கு கப்ருடைய வேதனையிலிருந்தும்,நரக நெருப்பிலிருந்தும் பாதுகாத்து சுவர்க்கத்தின் உயர் பதவியை ஏக இறைவன் தருவானாக என்று பிராத்தனை செய்தவனாக...
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.