முத்துப்பேட்டை பிரியாணி செய்முறைகள்! சமையல் குறிப்புகள்!
மட்டன் - ஒரு கிலோ
பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ
பெரிய வெங்காயம் - 6
தக்காளி - 6
பச்சை மிளகாய் - 6
இஞ்சி, பூண்டு விழுது - 2 1/2 மேசைக்கரண்டி
பட்டை - 3
கிராம்பு - 10
ஏலக்காய் - 15
அன்னாசி மொக்கு - 2
மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - 1 கப்
எலுமிச்சை - ஒன்று
புதினா - ஒரு கப்
கொத்தமல்லி - ஒரு கப்
உப்பு - 3 மேசைக்கரண்டி
நெய்-5 ௩கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
ரம்பை இலை=
கலர் பொடி

செய்முறை
அரிசியில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளி இரண்டையும் மெல்லிய நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை நீள வாக்கில் கீறி வைத்துக் கொள்ளவும்.
புதினா கொத்தமல்லி தழைகளை கழுவி வைக்கவும்.
கறியினை சுத்தம் செய்து மஞ்சத் தூள் போட்டு கழுவி வைக்கவும்
அதில் தயிர் பாதி இஞ்சி, பூண்டு விழுது மிளகாய் தூள் கிலரி வைக்கவும்
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி மொக்கு போட்டு பொரிய விடவும். உடனே நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கீறின பச்சை மிளகாய் போட்டு 3 நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கின வெங்காயம் தக்காளி, கறியை போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதக்க வேண்டும்.
புதினா கொத்தம்ல்லி போட்டு வதக்க வேண்டும்.
இதனுடன் கறி துண்டங்களைப் போட்டு மசாலா கறி துண்டங்களை சேரும்படி நன்கு பிரட்டி விடவும். அதில் ரம்பை இலை தயிர் கரம் மசாலா சேர்த்து அதிக தீயில் வைத்து கிளறவும்.
பிறகு 6 கப் தண்ணீர் சேர்த்து கலர் பொடி உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி மூடி விடவும்.
சுமார் 15 நிமிடம் கழித்து, கொதித்து வாசனை வந்ததும் அரிசியை களைந்து போட்டுக் கிளறி விடவும்.
பரிமாறும் அளவு 7நபர்களுக்கு

ஆம்பூர் பிரியாணி -2

தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி -ஒருகிலோ
ஆட்டுகறி -ஒன்றரைகிலோ
தக்காளி -அரைக்கிலோ
வெங்காயம் -அரைக்கிலோ
பச்சைமிளகாய் -200கிராம்
பட்டை -ஒருதுண்டு
கிராம்பு -3
ஏலக்காய் -3
ரம்பைஇலை ௩துண்டு
அன்னாசிப்பூ -ஒன்று
ஜாதிப்பூ -ஒன்று
மல்லி -ஒருகட்டு
பொதினா -ஒருகட்டு
எண்ணெய் -100கிராம்
நெய் -100கிராம்
தயிர் -250கிராம்
இஞ்சிபூண்டு விழுது -300கிராம்
எலுமிச்சை பழம் -இரண்டு
உப்பு -ஒருகரண்டி

செய்முறை
வெங்காயம் தக்காளியை வெட்டிக்கொள்ளவும்
கறியை சுத்தம் செய்து துண்டுகள் போட்டு தயிரில் கால்மணி நேரம் ஊறவைக்கவும்
அரிசியை ஒன்றுக்கு ஒன்று தண்ணீர் ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும்
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் இலை போட்டு தாளித்து வெங்காயம் தக்காளி போட்டு வதக்கி கறியை போட்டு கிளறி இஞ்சி பூண்டு பொதினா மல்லிக்கீரையை போட்டு கிளறி இரண்டுகப் தண்ணீர் ஊற்றி கறியை நன்கு வேகவைக்கவும்
கறி வெந்ததும் வேகவைத்த அரிசியை போட்டுக்கிளறி பத்து நிமிடம் தம்மில் போட்டு வெந்ததும் அடுப்பை அனைக்கவும்
முட்டை பிரியாணி

தேவையான பொருட்கள்
முட்டை -5
பிரியாணி அரிசி -அரைகிலோ
வெங்காயம் -இரண்டு
தக்காளி -மூன்று
இஞ்சி பூண்டு விழுது -இரண்டுகரண்டி
மிளகாய்தூள் -ஒருகரண்டி
கரம்மசாலாதூள் -ஒருகரண்டி
மஞ்சள்தூள் -ஒரு டேபிள்ஸ்பூன்
தயிர் -150கிராம்
தேங்காய்பால் -150கிராம்
உப்பு -இரண்டுடேபிள்ஸ்பூன்
எண்ணெய்+நெய்-100கிராம்
பட்டை சிறியதுண்டு
கிராம்பு ,ஏலக்காய் -தலா இரண்டு

செய்முறை
அரிசியை உதிர் உதிராக வேகவைத்துக்கொள்ளவும்
முட்டையை வேகவைத்து தோல்களை உரித்துக்கொள்ளவும் அதை லேசாக கீறிக்கொள்ளவும்
வெங்காயம் தக்காளியை வெட்டிக்கொள்ளவும்
பச்சைமிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம் தக்காளியை போட்டு வதக்கி இஞ்சி பூண்டு மிளகாய்தூள் மஞ்சள்தூள் மசாலாதூள் போட்டு கிளறி முட்டையை போட்டு இரண்டு நிமிடம் போட்டு வதக்கவும் பின் தேங்காய்பால் தயிர் ஊற்றி ஒருகப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் வேகவிடவும் பின் உதிர்த்து வைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறி தம்மில் போடவும் கடைசியில் எல்லாம் சேர்ந்தால் போல் வந்ததும் மேலே மல்லிக்கீரை தூவி அடுப்பை அனைக்கவும்
பரிமாறும் அளவு 3நபர்கள்

வேலூர் பிரியாணி

சுவைமிக்க இந்த பிரியாணியைப் பார்த்தாலே பரவசம்! ருசித்தாலோ நவரசம்!

தேவையான பொருட்கள்
ஆட்டிறைச்சி 1 கிலோ
வெங்காயம் 1/4 கிலோ
தக்காளி 200 கிராம்
இஞ்சி விழுது 50 கிராம்
பூண்டு விழுது 50 கிராம்
பச்சை மிளகாய் 4
மிளகாய்த் தூள் 4 தேக்கரண்டி
தயிர் 200 மிலி
பட்டை 1 துண்டு
கிராம்பு 4
ஏலக்காய் 2
கொத்தமல்லித் தழை நறுக்கியது 6 மேஜைக்கரண்டி
புதினா 4 தேக்கரண்டி.
எலுமிச்சை 1 பழத்தின் ஜூஸ்
ரிஃபைண்டு கடலை எண்ணெய் 1/4 லிட்டர்
அரிசி (ஜீரகச் சம்பா அல்லது பாசுமதி) 1 கிலோ
உப்பு தேவையான அளவு

செய்முறை
ப்ரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணைய் சூடானவுடன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து வெடித்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
தக்காளியை உடன் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
இறைச்சியை அதில் சேர்த்து, 5 நிமிடத்திற்கு நிறம் மாறும்வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.
இத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில், நறுமணம் வரும்வரை தொடர்ந்து கிளற வேண்டும்.
மிளகாத்தூள் சேர்த்து சிம் தீயில், 5 நிமிடம் கலக்க வேண்டும்.
தயிர், பச்சைமிளகாய், கொத்தமல்லி ,புதினா, தேவையான அளவு உப்பு இவைகளைக் கலந்து, நீர் 1/2 டம்ளர் விட்டு, குக்கரை மூடி 4 விசில் வரும் வரை, மிதமான தீயில் ப்ரஷர் குக் செய்ய வேண்டும்.
அரிசியை ஒரு முறை அலசி விட்டு, அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பெரிய பாத்திரத்தில் 5 லிட்டர் நீர் விட்டு, உப்பு போட்டு கொதிக்கவைக்க வேண்டும்.
அதில் அரிசியை சேர்த்து, கூடவே 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு விட்டு, 80 சதவிகிதம் வேக்காடு வரும் வரை வேகவிட வேண்டும்.
எலுமிச்சை சாறு விடுவதால் அரிசி உடையாது.
இப்போது குக்கரைத் திறந்து, ருசி சரிபார்த்து, எலுமிச்சை சாறு கலந்து, மிதமான தீயில், எண்ணைய் மேலே வரும்வரை சூடாக்கி, நன்கு வடித்த சாதத்தை சேர்த்து, அரிசி உடையாமல் சன்னமாக கிளற வேண்டும்.
அடுப்பில் தோசைக்கல் வைத்து, அதில் சிறிது நீர் ஊற்றி, குறைவான தீயில், மேலே கலந்த சாதம் உள்ள பாத்திரத்தின் விளிம்பில் ஈரத்துணியை தலைப்பாகை போல் சுற்றி, காற்றுப் புகாமல் மூடி, மூடி மேல் ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை 'வெய்ட்' போல் வைத்து சுமார் 20 நிமிடம் 'தம்' போட வேண்டும்.
தலைப்பாகை துணி இல்லாமலும் மூடி வைக்கலாம்.
'தம்' முடிந்த பிறகு, திறந்து பார்த்தால் 'கம கம' வேலூர் பிரியாணி சுண்டி இழுக்கும்.
அப்புறம் என்ன, வெட்ட வேண்டியதுதான்!

குறிப்பு:
'மைக்ரோவேவ் அவன்' உள்ளவர்கள் 'தம்' போடுவதற்கு பதிலாக, மைக்ரோவேவ் பாத்திரத்தில்,கலவையைப் போட்டு 5 நிமிடம் மைக்ரோவேவ் 'குக்' செய்தால் சுவையான, நறுமணம் கமழும் வேலூர் பிரியாணி தயாராகி விடும்.
பரிமாறும் அளவு 8 பேர்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.