குண்டு வெடித்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் - அதிர்ச்சிக்குள்ளாக்கிய காட்சிகள்!
சிரியாவின் அலெப்போ நகர தாக்குதலில் மீட்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான காட்சிகள் உலக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றன.

சிரியாவின் மேற்கு பகுதி அந்நாட்டு அதிபரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், கிழக்குப் பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. கிழக்கில் உள்ள அலெப்போ நகரில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இந்நகரில் நடந்த மற்றொரு தாக்குதலில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்த போது இரண்டு, மூன்று வயதுடைய சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

தலை மற்றும் முகத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவர்கள் பீதியுடன் அமர்ந்திருந்த காட்சிகள் இணையதளம் மூலம் வேகமாகப் பரவி வருகின்றன. இந்த காட்சிகள் உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், இச்சம்பவம் உலக மக்களிடையே மிகப்பெரும் விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது.. சமூக வலைத்தளங்களில் இது குறித்த படங்கள் வைரலாக பரவி வருகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.