முத்துப்பேட்டையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கைமுத்துப்பேட்டையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முத்துப்பேட்டை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சிறப்பு சாலைகள் திட்டம், இயற்கை இடர்பாடுகள் நிதி, பொதுநிதி உள்ளிட்ட திட்ட நிதிகளை செலவிட்டு போடப்பட்ட சிமென்ட் சாலைகள் படுமோசமாக உள்ளன. நடந்து செல்லவோ, வாகன போக்குவரத்துக்கோ லாயக்கின்றி மாறிவிட்ட சாலைகளால் விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன.

கடந்தாண்டுகளில் சுமார் ரூ.2 கோடி திட்ட மதிப்பீட்டில் பேரூராட்சி பகுதிகளில் பயனுக்கு வந்த சிமென்ட் சாலைகள்  பயனுக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே போதிய தரம் இல்லாததால் சேதமாகி விட்டன. ஏற்கெனவே ரூ. 39.70 லட்சத்தில் போடப்பட்டு 8,9,13 வார்டுகளை இணைக்கும் பேட்டை இணைப்புசாலை, ரூ.13.40 லட்சத்தில் போடப்பட்ட 1,18 வார்டுகளை இணைக்கும் மருதம்கமழ்வெளி கால்நடை ஆஸ்பத்திரிசாலை, 4வது வார்டில் ரூ.4.70 லட்சத்தில் அமைந்துள்ள பழைய போஸ்ட் ஆபிஸ் சிமென்ட் சாலை ஆகியன, ஜல்லிகள் பெயர்ந்து மண் சாலையாக மாறி விட்டது. இவற்றை போலவே கடந்த நான்கரை ஆண்டுகளில் போடப்பட்ட பெரும்பாலான சிமென்ட் சாலைகள் அனைத்தும் பயன்படுத்த வழியின்றி உள்ளது. எனவே புதிதாக தார்சாலை அமைத்து தரவேண்டுமென முத்துப்பேட்டையில் உள்ள சமூக ஆர்வலர்கள் வலியிறுத்தியுள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.