ஷார்ஜா – துபாய் இடையே புதிய போக்குவரத்து இணைப்புச் சாலை திறப்புஅமீரகத்தில்  போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் என ஷார்ஜா - துபாய் சாலைகளை கண்ணை மூடிக்கொண்டு கூட எந்த ஓட்டுனரும், பயணியும் சொல்வர்.

ஷார்ஜா – துபாய் இடையே தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான ஒரு முயற்சியாக 49 மில்லியன் திர்ஹம் செலவில் 3 கி.மீ தூரத்திற்கு 7.3 புதிய மீட்டர் அகலமுடைய இருவழி காங்க்ரீட் சாலை நேஷனல் பெயின்ட்ஸ் மேம்பாலம் அருகில் கட்டப்பட்டு இன்று முதல் வாகனப் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.

ஷார்ஜா பல்கலைகழகம் எதிரில் உள்ள ஷார்ஜா ஆங்கிலப் பள்ளி பின்பக்க சாலையில் வாகனத்தை செலுத்தினால் மலிஹா சாலையிலுள்ள அவுத் ருக்கன் மேம்பாலம் வழியாக சென்று முஹமது பின் ஜாயித் தேசிய நெடுஞ்சாலையை எளிதாக சென்றடையலாம் என SRTA விளக்கமளித்துள்ளது.

இதன்மூலம் இன்டஸ்ட்ரியல் ஏரியா 15 மற்றும் 17 ஆகிய பகுதிகளில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் குறையுமென்று எதிர்பார்க்கப்படுவதாக ஷார்ஜா சாலை மற்றும் போக்குவரத்துத் துறை (SRTA) தலைவரும் பொறியாளருமான யூசுப் ஸாலேஹ் அல் சுவைஜி தெரிவித்தார்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.