காஷ்மீரில் வன்முறையாளர்களை ஒடுக்க பெல்லட் துப்பாக்கிகளுக்கு தடை கூடாது: CRPF
வன்முறையாளர்களை கலைக்க பயன்படுத்தப்படும் பெல்லட் துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டால், உயிரிழப்பு அதிகரிக்கும் என்று காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில், சிஆர்பிஎப் பதிலளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் 8-ம் தேதி தீவிரவாதி ஹிஸ்புல் முஜாஹிதீன் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.

இதனைத்தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் 64-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பதற்றம் நிலவி வருவதால், காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் 43வது நாளாக இன்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

பாதுகாப்பு படையினரின் பெல்லட் துப்பாக்கி தாக்குதலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண் பார்வை இழந்துள்ள நிலையில், அந்த வகை துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, பெல்லட் துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஆர்.எப் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கூட்டத்தைக் கலைப்பத்தற்காக பயன்படுத்தப்படும் பெல்லட் துப்பாக்கிகள் செயல்பாட்டில் இருந்து திரும்பப்பெறப்பட்டால், பதற்றமான சூழ்நிலைகளில் ஏதும் செய்ய முடியாது என்றும், வேறு வழியின்றி துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டால், அது உயிரிழப்பிற்கு வழிவகை செய்யலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.