மௌலானா சம்சுத்தீன் காஷிமி அவர்களை ISIS உடன் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியீடு! தேசிய புலனாய்வு அமைப்பு பதிவுசெய்து உள்ள குற்றப்பத்திரிகையில் இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக் உள்பட உலகம் முழுவதும் அறியபட்ட 14 போதகர்கள் இடம்பெற்று உள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகியா நாடுகளில் உள்ள மத போதகர்களின் விரிவுரைகள் / சொற்பொழிவுகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்பட்டு ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

தேசிய புலனாய்வு அமைப்பு குற்றபத்திரிகையில் இங்கிலாந்தை சேர்ந்த அன்ஜீம் சவுத்ரி, ஹமசா அண்ட்ரியாஸ் ஜோர்ஜி,இம்ரான் மன்சூர்,மிசனூர் ரஹ்மான் , அப்துல் வாலித், அமெரிக்காவை சேர்ந்த யாசீர் குவாதி, யூசூப் எஸ்டிஸ், ஹமசா யூசூப், மற்றும்  அகமத் மூசா ஜ்ப்ரில், ஆஸ்திரேலியாவைச் ஏந்ர்த முசா செரண்டோனியோ,சேக் பியிஸ் மொகமத் மற்றும் ஓமர் எல் பன்னா, ஜிம்ப்பாப்வேயை சேர்ந்த முப்தி மென்க் சேர்ந்த மஜித் மொகம்த் ஆகியோர் பெயர்கள் உள்ளன.

இந்நிலையில் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள TIMES OF INDIA நாளிதழ் இவர்களுடன் சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் அவர்களையும் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளது. இதில் அவருடைய பேச்சை இந்தியாவை சேர்ந்த ஒரு ISIS ஐ சேர்ந்தவர் கேட்டுள்ளதாக தொடர்பு படுத்தி வெளியிட்டுள்ளது.உலக அளவில் மார்க்க பிரச்சாரங்களில் சிறந்து விளங்கும் தலைசிறந்த மார்க்க அறிஞர்களை தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.