ஜெயலலிதாவை நபிகள் நாயகத்துடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர்... எதிர்க் குரல் எழுப்பிய அபூபக்கர் MLAதமீம்  அன்சாரி'யால் ஆட்சேபம் தெரிவிக்க முடியாத நிலையில்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆவேசத்துடன் எதிர்க் குரல் எழுப்பினார்..!

நேற்றைய(02.08.2016) சட்டபேரவை நடவடிக்கையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசுகைபில்

பல மத தெய்வங்களையும் முதல்வர் அவர்களோடு ஒப்பிட்டு பேசினார் அத்தோடு நபிகள் நாயகத்தையும் ஒப்பிட்டு பேசும் போது

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் கடும் ஆட்சேபனை செய்து அமைச்சரின் இந்த பேச்சு இல்லாமிய தத்துவத்திற்கு எதிரானது எங்கள் உணர்வை புண்படுததுவதுதாகும்.

எனவே, பேரவைத் தலைவர் அமைச்சரின் இந்த பேச்சை அவைக் குறிப்பிலிிருந்து நீக்கம் செய்ய வலியுறுத்தினார்

தொடர்ந்து பேசிய அமைச்சர் நாங்கள் நபிகள் நாயகத்தை பார்க்கவில்லை அம்மாவின் உருவத்தில் அவரை பார்கிறோம் என்றதும்

முஹம்மது அபூபக்கர் எழுந்து கடும் கண்டனம் தெரிவித்ததின் காரணமாக சபாநாயகர் உடனே அமைச்சரின் பேச்சை அவைக் குறிப்பிவிருந்து நீக்குவதாக தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் இந்த விவாதம் நடந்தபோது தமீம்  அன்சாரி 'எம்எல்ஏ'வும் சபையில் இருந்தும் அமைச்சரின் பேச்சை எதிர்க்கவுமில்லை;

அபூபக்கர் 'எம்எல்ஏ'வுக்கு ஆதரவாக எழுந்து நிற்கவுமில்லை.

Maruppu - மறுப்பு
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.