மாட்டுக்கறி தான் உசேன் போல்டின் வெற்றிக்கு காரணம் என்று கூறிய பா.ஜ.க M.Pபாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த டெல்லி வடமேற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் உதித் ராஜ், மாட்டுக்கறி சாப்பிட்டதால்தான் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் ஒன்பது தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இவரின் கருத்தால், பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் மாடுகளை இறைச்சிக்காக அறுக்கவும், விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், குஜராத் மாநிலம் உனா மாவட்டத்தில், தோலுக்காக பசுவைக் கொன்றதாகக் கூறி தலித் இளைஞர்களின் மீது பசுக் காவலர்கள் கடுமையாகத் தாக்கினர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அம்மாநில தலித் சமுதாயத்தவர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.