அரசுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் கோரிக்கை RSS ABVP தடை செய்!திருச்சி அரசு சட்டகல்லூரி மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டி, மானபங்கம் செய்த ABVP குண்டர்களை கைது செய்! ABVP ரவுடி கூட்டத்தை
(13-08-2016) அன்று திருச்சி அரசு சட்ட கல்லூரியில் RSS-ன் துணை அமைப்பான ABVP சார்ந்த குண்டர்கள் சட்ட கல்லூரி மாணவர்களை ABVP ல் உறுப்பினராகும் படி மிரட்டியுள்ளனர்.
இதில் சட்ட கல்லூரி மாணவி ஒருவரை உறுப்பினராக சேர கையெழுத்து போடும் படி கட்டாயப்படுத்தியுள்ளனர். அந்த மாணவி கையெழுத்திட மறுத்துள்ளார்.
இதனால் எரிச்சல் அடைந்த ABVP குண்டர்கள் அந்த பெண்ணின் ஆடையை இழுத்து தகாத வார்தையில் திட்டி, மிரட்டி அந்த பெண்ணை மானபங்கம் செய்துள்ளனர்.
இதை தட்டி கேட்ட சட்ட கல்லூரி மாணவர்களை காட்டுமிராண்டி தனமாக அடித்துள்ளனர்.
ஒரு அமைப்பில் உறுப்பினராக சேர்வது என்பது அவரவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால் இதற்கு மாற்றமாக இந்த அமைப்பில் தான் சேர வேண்டும் என வலுக்கட்டாயப்படுத்துவது இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மீறுவதற்கு சமம்.
மேலும் மாணவியை மானபங்கபடுத்திய ABVP குண்டர்கள் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற ஈன செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கக்கூடிய ABVP குண்டர்களை வன்மையாக கண்டிப்பதோடு, இன்னும் ABVP, RSS போன்ற விஷம இயக்கங்களை தேச பாதுகாப்பை கருதி அவ்வியக்கங்களை தடை செய்ய வேண்டும் என அரசுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.