தமிழக அரசு சுட்டிக்காட்டிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கான தடை நீக்கம்! - நீண்டநாள் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய SDPI கட்சி கோரிக்கை!
தமிழக அரசு சுட்டிக்காட்டிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கான தடை நீக்கம்! - நீண்டநாள் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய SDPI கட்சி கோரிக்கை!
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில் 2008 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு 1405 கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் தமிழக அரசால் விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், காலங்கடந்துவிட்டதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அரசாணையில் தலையிட முடியாது என்று கூறியும் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம்  ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் தடையாக தமிழக அரசு சுட்டிக்காட்டிய நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் வனம், சட்டம், நீதி, சிறைச் சாலைகள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில், ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பான கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தற்போது உயர்நீதிமன்றம் முடித்துவைத்துள்ள சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை சுட்டிக்காட்டி, வழக்கு நிலுவையில் இருப்பதால் கைதிகளை விடுதலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார். ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கு தடையாக அமைச்சர் சுட்டிக்காட்டிய வழக்கு தற்போது நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு எந்த தடையும் தற்போது இல்லை.

அதேப்போன்று சிறைக் கைதிகள் சம்சுதீன், ஜாகீர் ஆகியோர் தங்களையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி தனித்தனியாக தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த இரு மனுதாரர்கள் விடுதலை செய்யப்படவில்லையென்றால் அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஆகவே, தமிழக சிறைகளில் வாடும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றும், இனியும் மேற்கொண்டு காரணங்களை கூறாமல், நீண்டநாள் கோரிக்கையான ஆயுள் சிறைவாசிகளுக்கு விடுதலை அளித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.