உங்கள் டூ வீலரை மழை கால பாதிப்பிலிருந்து பாதுகாக்க 10 டிப்ஸ்!வழக்கமான நாட்களைவிட மழைநேரங்களில்தான் நம் டூவீலர் மக்கர் செய்யும். மழை வந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றில்லாமல் எப்போதும் தெரிந்து வைத்துக் கொள்ள இந்த 10 டிப்ஸையும் படிங்க முதல்ல!.

1. மழைக்காலத்தில் ஸ்டார்ட் ஆவதில் சிக்கல் ஏற்படும். தினமும் காலையில் வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் உடனடியாக அதை இயக்காமல் சில நிமிடங்கள் அந்த நிலையிலேயே வைக்கவும். இது, இரவில் இன்ஜினில் தேங்கியிருக்கும் ஆயில், இன்ஜின் முழுக்கப் பரவ உதவும்.

2. டயர் வழவழவென்று ஆகும்வரை அதை மாற்றாமல் இருப்பது மழைச்சாலைகளில் ஆபத்தை ஏற்படுத்தும். வருடத்துக்கு ஒருமுறை அல்லது 30 ஆயிரம் கி.மீக்கு பயணத்துக்கு ஒருமுறை டயர் மாற்ற வேண்டும். டயர் மாற்றிய முதல் மூன்று மாதங்கள், வண்டியை மெதுவாக ஓட்டுவது பாதுகாப்பானது.

3. சிலர் அழகுக்காகவும், சத்தத்துக்காகவும் வண்டியின் எக்ஸ்ஹாஸ்ட் டியூபை மாற்றுவார்கள். இதனால் மழைக்காலத்தில்  எக்ஸ்ஹாஸ்ட் டியூபும், இன்ஜினும் பாதிப்படையும்

4. வண்டியின் ஆக்ஸிலேட்டரை சீரான வேகத்தில் இயக்கவும். இல்லையெனில், மழைக்காலத்தில் இன்ஜின் பாதிக்கப்படலாம்.

5. வண்டி ஓட்டுவதால் முகுது வலி ஏற்படுகிறது என்றால், வண்டியின் சஸ்பென்ஷனில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சஸ்பென்ஷன் ஆயில் மாற்ற வேண்டியது அவசியம்.

6.. வண்டி ஓட்டும்போது தேவையின்றி ஹார்ன் அடிப்பது, ஹெட் லைட்ஸை அதிக வெளிச்சமாகப் பயன்படுத்துவது போன்றவை பேட்டரியின் ஆயுளைக் குறைக்கும்.

7. இன்ஜினுக்கு அருகில் சின்னதாக ஏர் ஃபில்டர்ஸ் இருக்கும். இவற்றை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம்செய்யத் தவறினால், மைலேஜ் குறையக்கூடும்.

8. வாகன பாகங்களில் தேய்மானம் ஏற்படாமல் இருக்க, ஒவ்வொரு 8 ஆயிரம் கி.மீ பயணத்துக்கு ஒருமுறை வாகனத்தில் உள்ள அனைத்து ஆயில்களையும் மாற்ற வேண்டும். 10 ஆயிரம் கி.மீ பயணத்துக்குப் பின் வாகனத்தின் ஸ்பார்க் பிளக்கை மாற்ற வேண்டும். இல்லையெனில் வாகனத்தை ஸ்டார்ட் செய்வதில் பிரச்னை ஏற்படும்.

9. பிரேக் பிடித்துக்கொண்டே வண்டி ஓட்டும் வினோதப் பழக்கம் இருந்தால், வண்டியின் டிஸ்க், பிரேக் வயர்ஸ் எல்லாம் சீக்கிரமே வீணாகிவிடும். ஜாக்கிரதை.

10. வண்டியில் தேவையில்லாத உதிரி பாகங்களை அதிகமாகப் பயன்படுத்தினால் அதன் மைலேஜ் திறன் விரைவில் குறையும்.

வண்டியைப் பார்க் செய்யும்போது மழையில் நனையாமல் பாதுகாப்பது, அதிக நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் செல்லாமல் இருப்பது போன்றவையும் இதில் அடங்கும். பத்திரமா போங்க...


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.