பாகிஸ்தானில் 118 ஆண்டுகளாக கைது செய்யப்பட்டு சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் ஆலமரம்பாகிஸ்தானில் 118 ஆண்டுகளாக சங்கிலியால் கட்டபட்டிருக்கும் ஆலமரம் காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது

பாகிஸ்தானில் உள்ள லண்டு கோடல் என்ற பகுதியில் பழமையான ஆலமரம் ஒன்று, சுற்றிலும் சங்கிலியால் கட்டப்பட்டு காட்சியளிக்கிறது. இதற்கு ஆங்கிலேயேர் காலத்தில் நடந்த ஒரு சுவையான சம்பவம் காரணமாக கூறப்படுகிறது. 1898-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசின் காவல் துறை அதிகாரியான ஜேம்ஸ் ஸ்குவிட் என்பவர் தனது வாகனத்தில் மது அருந்தியவாறு வந்தபோது, தனக்கு வழிவிட இந்த ஆலமரம் மறுப்பதாக கூறி, அதனை உடனே கைது செய்தார். அதன் மீது நான் கைது செய்யப்பட்டுள்ளேன் என்ற பலகையையும் அவர் வைத்தார். இந்த சம்பவம் நடந்து 65 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டாலும், ஆங்கிலேயர் ஆட்சியின் கொடுமைகளை நினைவு படுத்த இந்த ஆலமரம் சங்கிலியால் கட்டப்பட்டவாறே உள்ளது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எச்சரிக்கவே ஆங்கிலேயர்கள் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.