12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் SDTU ரயில் மறியல் போராட்டம்! - 100 க்கும் மேற்பட்டோர் கைது!
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது, அடிப்படை ஊதியத்தை 18 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும், தொழிலாளர் நலனுக்கு எதிராகவும் செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போராட்டத்தில் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கமும் கலந்துகொண்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒருபகுதியாக சென்னை_கடற்கரை_ரயில் நிலையத்தில் சென்னை மாவட்ட SDTU தொழிற்சங்கம் சார்பாக இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் பூட்டோ சாகுல் தாங்கினார். தொழிற்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.டி.சாமுவேல் பால், காஜா மைதீன், தொழிற்சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் எஸ்.கே.ஆர். காதர் பாஷா, மாவட்ட செயலாளர் சிக்கந்தர், வடசென்னை மாவட்ட தலைவர் அப்பாஸ், செயலாளர் ராயபுரம் சேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 100க்கும் மேற்ப்பட்ட SDTU தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.