முத்துப்பேட்டை சாபகேடுகளில் இதுவும் ஒன்று .... ரூ.1.20 கோடியில் கட்டிய புதிய பஸ் நிலையம் திறப்பு எப்போது?புதிய பஸ் ஸ்டான் திறப்பு எப்போது? எத்தனை
முறையா திறப்பீங்க...

முத்துப்பேட்டையில் ரூ.1.20 கோடியில் கட்டிய புதிய பஸ் நிலையம் திறப்பு எப்போது?

முத்துப்பேட்டையில் புதிதாக கட்டிய பஸ் நிலையத்தை திறப்பது எப்போது என்று பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். முத்துப்பேட்டை பேரூராட்சி  கூட்டம் அதன் தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடந்தது. துணை தலைவர் அப்துல் வகாப் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் பேசியது:

முத்துப்பேட்டை புதிய பஸ் நிலையத்தை  புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் பஸ்  நிலையம்  பயனுக்கு வந்தபாடில்லை. கார், வேன்கள் மட்டுமே அதை பயன்படுத்தி வருகின்றன. இதனால் தொலை தூர வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் பைபாஸ் வழியாகவே இயக்கப்படுகின்றன. மற்ற நகர் பகுதிகளுக்கு சென்று திரும்பும் பஸ்களும், பஸ் நிலையம் வராமல்  நேரடியாக இயக்கப்பட்டு விடுகின்றன. இதனால் உள்ளூர் மற்றும்  வெளியூர் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தாமதிக்காமல் பஸ் நிலையத்தை  திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விடவேண்டும்.

முத்துப்பேட்டையில்  குடிநீர் விநியோகத்தில் பிரச்னையும், குளறுபடியும் தொடர்கிறது. பேட்டை இணைப்புசாலை பழுதாகி கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. சீரமைத்து தரவேண்டுமென கவுன்சிலர்கள் மாரிமுத்து(பாஜக), ஜகபருல்லா(திமுக) உட்பட பலரும் வலியுறுத்தினர். இதுபற்றி திமுக கவுன்சிலர் ஜகபருல்லா கூறுகையில், கூட்டத்தில் செயல் அலுவலர் கலந்து கொள்ளவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். நகரில் உள்ள உயர் மின்கோபுர விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனை சீரமைத்திட செயல் அலுவலர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். விநாயகர் ஊர்வலத்துக்கு முன்பாக அவற்றை சரி செய்திட கேட்டுள்ளோம்.

புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளுக்காக ரூ. 1 கோடியே 20 லட்சத்துக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அதை பயனுக்கு திறந்துவிட அதிகாரிகள் நாட்களை கடத்தி வருகின்றனர். ரயில்வே ஸ்டேஷன் மூடப்பட்டு விட்ட பிறகு வெளியூர் பயணத்துக்கு பஸ் தேவை அதிகரித்துள்ளது.  அதே போன்று மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை, சிதம்பரம் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்லும் பஸ்கள் பலவும் முத்துப்பேட்டை வழித்தடம் வழியாக இயக்கப்படுகிறது. ஆனால் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல பஸ்ஸ்டாண்ட் வசதியில்லை.  இவற்றால் பயணிகளின் சிரமம் தொடர்கிறது. எனவே துரித நடவடிக்கைக்கு வலியுறுத்தினோம் என்றார்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.