வரும் 16-ம் தேதி தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகள் இயங்காது!



தமிழகத்தில் வரும் 16-ம் தேதி பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று தமிழ்நாடு பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.பி.முரளி அறிவித்துள்ளார்.

காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். கர்நாடகத்தின் இந்த வன்முறை தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 16-ம் தேதி முழு கடையடைப்பு, சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளும் விதமாக, தமிழகத்தில் வரும் 16-ம் தேதி பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று தமிழ்நாடு பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.பி.முரளி அறிவித்துள்ளார்.

கர்நாடக அரசைக் கண்டித்து நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் சுமார் 4600 பெட்ரோல் பங்குகள் பங்கேற்பதாக கே.பி.முரளி கூறியுள்ளார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.