கோவையில் மீண்டும் 1997 போன்ற நிலையை உருவாக்க இந்துத்துவ சக்திகள் களமிறங்கியது ஏன்?கோவையில் மீண்டும் 1997 போன்ற நிலையை உருவாக்க இந்துத்துவ சக்திகள் களமிறங்கியது ஏன்?

இதைப் புரிந்துகொள்வது மிகவும் எளிது.

இந்துத்துவ கும்பல் வன்முறை செய்ததற்கு இரு நாட்களுக்கு முன்னர்தான் கோவையில் ஒரு இந்துப் பெரியவரின் இறப்பை முஸ்லிம்கள் பள்ளிவாசல் அறிவிப்புப் பலகையில் வெளியிட்டு, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு வலு சேர்த்தனர்.

அது மிகப்பெரும் செய்தியாகவும் மாறியது.

ஆர்.எஸ்.எஸ் கும்பல் எதை வேண்டுமானாலும் சகித்துக் கொள்வார்கள்;

ஆனால், இந்து முஸ்லிம் ஒற்றுமை என்றால் சகிக்கவே மாட்டார்கள்.

கோவையில் மத முரண்பாடு நீடித்தால்தான் அவர்களின் இருப்பை தக்கவைக்க முடியும்.

மத நல்லிணக்கம் ஓங்கினால், அதுவே ஆர்.எஸ்.எஸ்.ஸின் சவக் குழியாகிவிடும்.

எனவே, சாமி ஐயர் எனும் இந்துப் பெரியவரின் மரணத்தை கண்டு முஸ்லிம்கள் துயரமடைவது ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு ஆகவே ஆகாது.

அதனால்தான் இந்த வன்முறைகள்.

காந்தி கொலை, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்பு – இவை அனைத்திலும் கைது செய்யப்பட்டவர்கள் இந்துத்துவ கும்பலே.

ஏனெனில், காந்தி இந்து- முஸ்லிம் ஒற்றுமைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவர்.

அஜ்மீர் தர்கா என்பது இந்துக்களும் முஸ்லிம்களும் சங்கமிக்கும் இடம்.

 சம்ஜவ்தா ரயில் என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவின் குறியீடாக ஓடும் ரதம்.

இப்போது சொல்லுங்கள்; ஆர்.எஸ்.எஸ் இஸ்லாமியர்களுக்கு எதிரான இயக்கமா?

இந்திய நாட்டுக்கு எதிரான இயக்கமா?
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.