திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றிய, நகர இந்து முன்ணனி சார்பில் 24-ம் ஆண்டு வினாயகர் ஊர்வலம் 11-ம் தேதி நடைபெறுகிறது.விநாயகர் ஊர்வலப் பாதையில் கண்காணிப்பு கேமரா
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றிய, நகர இந்து முன்ணனி சார்பில் 24-ம் ஆண்டு வெற்றி வினாயகர் ஊர்வலம் 11-ம் தேதி நடைபெறுகிறது.
இதில் ஜாம்புவானோடை, தில்லைவிளாகம், உப்பூர், கீழநம்மங்குறிச்சி, கோவிலூர, மங்கலூர், மருதம்கமழ்வெளி உட்பட 19 கிராம ஊராட்சி பகுதியிலிருந்து வினாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்படுகின்றன. ஊர்வலத்தில் பங்கேற்கும் வினாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று ஜாம்புவானோடை வந்து சேர்ந்தன. இந்நிலையில் ஊர்வல பாதுகாப்புகாக வந்த போலிசார் அனைவரும் தனியார் மண்டபங்களில் தங்க வைக்கபட்டுள்ளனர்.
தொடர்ந்து ஊர்வலம் ஜாம்புவானோடை சிவன் கோயிலடியில் துவங்கி வடகாடு, கல்லடிகொல்லை, தர்கா, ஆசாத்நகர்பாலம், பழைய பஸ்டாண்ட், பங்களாவாசல் வளைவு, செம்படவன்காடு ரயில்வேகேட் வழியாக பாமணியாறு பாலம் வரையிலான பாதை நெடுகிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் துரிதமாக நடந்துவருகின்றன.
இந்த பாதை வழியாக வரும் வினாயகர் ஊர்வலத்தை கண்காணிக்கவும் அசம்பாவிதங்களை கண்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் கேமராக்களை அதிகமாக பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.
கடந்தாண்டை போலவே நடப்பாண்டு ஊர்வலத்தில் சுமார் 2 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி செந்தில்குமார் முத்துப்பேட்டைக்கு வந்தார். இரண்டாவது முறையாக ஊர்வலபாதையை ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்றிந்தார். அப்பொழுது முத்துப்பேட்டை டி.எஸ்.பி அருண், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.