249 ரூபாய்க்கு 300 GB- BSNL அதிரடி
Reliance நிறுவனத்தின் Jio என்ற பெயரில் 4ஜி சேவையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதற்கு வாடிக்கையாளர்களுக்கு இடையே மிகுதியான வரவேற்பு கிடைத்ததை அடுத்து, தன்னுடைய வாடிக்கையாளர்களை இழக்காமல் தக்க வைத்துக்கொள்வதற்கு மத்திய அரசு நிறுவனமான BSNL, ரூ.249-க்கு மாதம் 300 ஜிபி அளவுக்கு இண்டர்நெட்டைப் பயன்படுத்திக்கொள்ளும் சேவையை இன்று அறிமுகப்படுத்தவுள்ளது.

BSNL-இன் இந்த திட்டத்தின்படி, 1 GB இணைய சேவையை ரூ.1-க்கும் குறைவான செலவில் பயன்படுத்த முடியும். இணைய பயன்பாடு 300 ஜிபியை தாண்டினாலும், ஒரு ஜிபி இணையத்துக்கான கட்டணம் ரூ.1-க் கும் குறைவாகவே கணக்கிடப்பட்டு, மொத்த பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் விதிக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என BSNL பொது மேலாளர் லுங்கிம், நேற்று டிமாபூரில் அறிவித்திருந்தார்.

‘Experience Unlimited Broadband 249’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் புதிதாக பிராட்பேண்ட் சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். ரூ.249-க்கு மாதம் 300 GB இண்டர்நெட் சேவை என்பது BSNL-இல் இதுவரை அறிவித்த இண்டர்நெட் சேவைகளிலேயே மிகவும் குறைவான கட்டணத்தைக் கொண்டதாகும்.

இனிமேல் புதிதாக பிராட்பேண்ட் சேவையை பெறும் வாடிக்கையாளர்கள் முதல் 6 மாதங்கள் ரூ.249-க்கு சேவையை பெறலாம். அதற்கு பிறகு இந்த சேவைக்கு ரூ.499 செலுத்த வேண்டும். BSNL பிராட்பேண்ட் இணைய சேவையில் நிறைய வாடிக்கையாளர்களை சேர்க்கும் முயற்சியாக நாடு முழுவதும் ‘Experience Unlimited Broadband 249’ திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.