புதுவையில் வெடித்த வெடிகுண்டு காவிகளுக்கு தொடர்பா! திசைதிருப்பும் போலீஸ் - 2 பேர் கைதுரெளடியை கொல்ல பதுக்கிவைக்கப்பட்டதாக   புதுவையில் வெடித்த வெடிகுண்டு சம்பவத்தை போலிஸ்  திசைதிருப்புகிறதா என்ற சந்தேகம் உள்ளதாக பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.

சமீபகாலமாக தமிழகம் கேரளா மற்றும் பல மாநிலங்களில் காவி தீவிரவாதிகள் வெடிகுண்டு தயாரிக்கும் பொழுது உயிர் இழந்துள்ள நிலையில் மேலும் அதேபோல் இந்த  குண்டு வெடிப்பும் இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது

பாண்டியில் பிஜேபி கட்சியினர் கால் ஊன்றுவதற்கு முயற்சித்து வரும் நிலையில் இது போன்ற சம்பவம் நடப்பது சந்தேகத்தை எழுப்புவது  குறிப்பிடத்தக்கது

 புதுவையில் ரெளடியை கொலை செய்ய பதுக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 புதுவை முதலியார்பேட்டை லட்சுமி நகர் சுந்தரராஜ தெருவில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் கடந்த 16-ஆம் தேதி இரவு வெடிகுண்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் அந்தப் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் காயமடைந்தனர். இந்த நிலையில் வெடிகுண்டுகள் அந்த வீட்டில் பதுக்கிய 2 பேரை போலீஸார்திங்கள்கிழமை கைது செய்தனர்.

 இது குறித்து முதுநிலை எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன் கூறியது: முதலியார்பேட்டை சுந்தரராஜ தெருவில் உள்ள பாழடைந்த வீட்டில் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக வதந்தி உள்ளது. இந்த நிலையில் செப். 16-ஆம் தேதி அங்கு வந்த சிவா மற்றும் பிரவீண் என்ற இளைஞர்கள் பந்தயம் கட்டி அந்த வீட்டுக்குள் செல்ல முயன்றனர்.

 அப்போது அங்கு வந்த அதே தெருவைச் சேர்ந்த ஓட்டுநர் குமரன் (22), பழச்சாறு கடை நடத்தி வரும் பூபதி (20) ஆகியோர் உள்ளே செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனாலும் சிவா, பிரவீண உள்ளே சென்றனர். அப்போது அங்கு ஒரு பை இருப்பதை பார்த்த அவர்கள், அதை எடுத்தனர். அப்போது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் சிவா, பிரவீண் இருவரும் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த முதலியார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அப்போது குமரன், பூபதி ஆகியோர் தலைமறைவாகிவிட்டது. தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை தேடி வந்த போலீஸார் திங்கள்கிழமையன்று கைது செய்தனர்.

 அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரெளடிகள் விக்கி, வினோத் ஆகியோர் வெடிகுண்டுகள் அடங்கிய பையை தங்களிடம் கொடுத்து பாழடைந்த வீட்டில் பதுக்கி வைக்குமாறு கூறியதாக தெரிவித்தனர். கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வெடிகுண்டுகள் அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.


மேலும் பிரபல ரெளடியும் தற்போதும் சிறையில் இருப்பவருமான மர்டர் மணிகண்டனிடம் பணியாற்றி வந்த வாணரப்பேட்டையை சேர்ந்த ரெளடி ஐயப்பனை கொலை செய்ய வெடிகுண்டுகள் பதுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

தற்போது ஐயப்பன் தனியாக இயங்கி வருவதால், அவரை மணிகண்டன், மற்றொரு ரெüடி அஷ்வின் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் கொலை செய்யப்போவதாகவும் அதற்கு உதவினால் பணம் கிடைக்கும் என்றும் விக்கி, வினோத் கூறியதன் பேரில் வெடிகுண்டுகளை குமரன், பூபதி பதுக்கியுள்ளனர்.
 கடந்த 15 நாள்களுக்கு முன்பு வந்த விக்கி, வினோத் ஆகியோர் ஐயப்பன் மீது குண்டு வீச எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் சரியான வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் அங்கேயே குண்டுகளை பதுக்கியுள்ளனர்.

தற்போது விக்கியும் வினோத்தும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்தால் மர்டர் மணிகண்டனுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் வெடிகுண்டுகள் எங்கு வாங்கப்பட்டன என்பது குறித்தும் தெரியவரும்.   எனவே இருவரையும் தேடி வருகிறோம் என்றார் ராஜீவ் ரஞ்சன்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.