வீட்டில் தொழுதுகொண்டிருந்த 3 பெண்களிடம் 12 பவுன் நகை பறிப்புநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வடகரை அரங்கக்குடி பகுதியை சேர்ந்தவர் கமாருதீன். இவரது மனைவி சகீலா நாச்சியா(வயது 45).
இவர் 23.09.2016 அன்று இரவு கதவு திறந்து  இருப்பது தெரியாமல் தொழுதுகொண்டிருந்தார்  இதை நோட்டமிட்ட 5 பேர் கொண்ட மர்ம கொள்ளை  கும்பல் சகீலாவின் வீட்டிற்குள் நுழைந்தது. அங்கு சகீலா உள்பட 3 பெண்கள் தொழுதுகொண்டிருந்தனர்  அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்து இருந்த 12 பவுன் செயினை பறித்தனர். பின்னர் அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து 3 பேரும் அவர்கள் வீட்டின் சன்னல் வழியாக சத்தம் போட்டு உதவி கேட்டனர். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து கதவை திறந்து விட்டனர்.

இது குறித்து செம்பனார் கோவில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தொழுகை நாளில் இந்த திருட்டு நடைபெற்று இருப்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.