சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை 31-09-2016 க்குள் கல்வி நிலையங்களில் சமர்பிக்க அறிவிப்பு !



தமிழ்நாட்டில் வாழும் மதவழி சிறுபான்மையினரான கிறித்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ-மாணவியர்கள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2016-17ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இணையதள முகவரியான www.scholarships.gov.in என்பதில் ஆன்லைன் முலம் விண்ணப்பிப்பதற்கான காலவரையறை புதியது மற்றும் புதுப்பித்தலுக்கு 31-09-2016 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டிற்கு 2279 மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை மைய அரசால் 2016-17ம் ஆண்டிற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது,

கல்வி உதவித்தொகை பெற தேவையான தகுதிகள் பின்வருமாறு:
1, மாணவ-மாணவிகள் கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.
2, பெற்றோர்-பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ. 2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
3, ஆதார் எண் குறிப்பிடப்பட வேண்டும்.

www.scholarships.gov.in என்ற புதிய இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இணைப்புகளை அப்லோடு செய்து மாணவ-மாணவியர்கள் பதிவு செய்யப்பட்ட அவ்விண்ணப்பதை படியிறக்கம் செய்து கையொப்பமிட்டு. அத்துடன் மதிப்பெண் சான்றிதழ். வருவாய்த்துறையிடமிருந்து பெற்ற மதத்திற்கான சான்று மற்றும் வருமானச் சான்றிதழ் அல்லது சுய சான்றோப்பம். கல்விக்கட்டணம் செலுத்திய ரசீது. இருப்பிட முகவரி. வங்கிக் கணக்கு எண் ( Core Bank Service Account Number, IFS Code ) ஆகிய விவரங்களுக்கான ஆவணங்களை இணைத்து அவர்கள் பயிலும் கல்வி நிலையங்களில் 31-09-2016 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிலையங்கள் மேற்படி ஆன்லைன் மூலம் மாணவ-மாணவியர்களால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை அவ்வப்போது பரிசீலித்து தகுதிபெற்ற விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்புதல் வேண்டும், சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மு்லம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது,
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.