பீகாரில் பேருந்து குளத்தில் கவிழ்ந்து விபத்து: 35 பேர் பலிபீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் குளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பீகார் மாநிலம், சித்தமார்கியில் இருந்து மதுபானி செல்லும் வழியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் 55 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் 35 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், பேருந்து அதிக நேரம் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் அதில் பயணம் செய்த அனைவரும் பலியாக வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இது குறித்து தகவல் தெரிவித்தும் மாவட்ட நிர்வாகம் மீட்பு பணிகளில் தாமதம் காட்டியது. பேருந்தை மீட்க்கும் பணியில் உள்ளூர் பொதுமக்கள் உடனடியாக ஈடுபட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.