பேஸ்புக்கால் இதுவரை 4 கோடி பேர் மரணம்!உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மத்தியில் மிகவும் பிரபலமானதும் அதிகளவானோர் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக பேஸ்புக் இருந்து வருகிறது.
பேஷ்புக் சமூக வலைத்தளத்தை அறியாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேஷ்புக் சமூக வலைத்தளத்தை தற்போது உலக முழுவதும் 150 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.

தினமும் 115 கோடி பேர் பேஷ்புக் வலைத்தளத்திற்குள் வந்து செல்கின்றனர்.

எவ்வாறாயினும் 2004ம் ஆண்டு முதல் இதுவரை பேஸ்புக் வலைத்தளத்தை பயன்படுத்திய சுமார் 4 கோடி பேர் மரணமடைந்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

ஒரு மணித்தியாலத்திற்கு பேஸ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் 428 பேரில் ஒருவர் மரணிப்பதாகவும் தினமும் 10 ஆயிரத்து 273 பேர் இறப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனடிப்படையில், ஒரு மாதத்தில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 500 இறப்பதாக கூறப்படுகிறது.இந்த இறப்பு வீதம் காரணமாக 2065ம் ஆண்டளவில் உலகில் பேஷ்புக் வலைத்தளத்தை பயன்படுத்துவோரை விட இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2065ம் ஆண்டில் உலகில் மிகப் பெரிய மரண நினைவுச் சின்ன இணைப்புகள் பேஸ்புக் குவியும் என கூறப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.