ஹஜ் பெருநாள் பண்டிகையையொட்டி துபாயில் 488 கைதிகளுக்கு பொது மன்னிப்பு விடுதலை !



ஹஜ் பெருநாள் பண்டிகையையொட்டி சிறைகளில் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு நாட்டினரில் 488 பேரை விடுதலை செய்யுமாறு துபாய் நாட்டின் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரக துணை ஜனாதிபதியும், பிரதமருமான ஷேக் முஹமத் பின் ரஷித் அல் மக்தூம் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த பொது மன்னிப்பின் மூலம் விடுதலையாகும் கைதிகள் அனைவரும் நேர்மையான பாதையை இனி கடைபிடித்து, தங்களது குடும்பத்தாருடன் இணைந்து வாழ துபாய் ஆட்சியாளர் ஷேக் மஹமத் பின் ரஷித் அல் மக்தூம் விரும்புவதாகவும், குறிப்பாக ஹஜ் பெருநாள் பண்டிகையை அவர்களும் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என ஆசைப்படுவதாகவும் துபாய் அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த 488 கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமீரக ஆட்சியாளரான ஷேக் கலீபா பின் சைது அல் நயான் பல்வேறு நாடுகளை சேர்ந்த 442 கைதிகளை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அவர்கள் விடுதலை ஆவதற்கு செலுத்த வேண்டிய அபராத தொகை அனைத்தையும் அரசே ஏற்றுக்கொண்டு வழங்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இதே வழியை பின்பற்றி அஜ்மான் ஆட்சியாளரான ஷேக் ஹுமைது பின் ரஷீது அல் நைமி பல்வேறு நாடுகளை சேர்ந்த 110 கைதிகளை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேற்கண்ட பகுதி சிறைகளில் இருந்து விடுவிக்கப்படும் வெளிநாட்டைச் சேர்ந்த கைதிகள் உடனடியாக தங்களது தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.