சவுதி அரேபியாவின் – தம்மாம் மண்டலத்தில் “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்” சார்பாக “தம்மாம் சென்ட்ரல் டவர் மருத்துவமனையில்” 51வது & 52வது மாபெரும் இரத்த தான முகாம்கள்
ஏக இறைவனின் சாதியையும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக!

இறைவனின் மாபெரும் கிருபையால் சவுதி அரேபியாவின் – தம்மாம் மண்டலத்தில் “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்” சார்பாக “தம்மாம் சென்ட்ரல் டவர் மருத்துவமனையில்” 51வது & 52வது மாபெரும் இரத்த தான முகாம்கள் 26 ஆகஸ்ட் 2016 மற்றும் 02 செப்டம்பர் 2016 ஆகிய தேதிகளில் ஹஜ் பயணிகளின் தேவையை முன்னிட்டு நடத்தப்பட்டது.

இரத்த கொடையாளிகள் விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையில் தங்களது சொந்த வேலைகளையும் துறந்து உயிர்காக்கும் இந்த உன்னத பணிக்காக காலை 8:30 மணி முதல் வர தொடங்கினர்.தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பிற மாநில மக்களும், பாகிஸ்தான், இலங்கை, சிரியா, எகிப்து, சூடான், ஏமன் ஆகிய நாடுகளை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் இரத்தகொடை அளித்தனர்.

இரண்டு வெள்ளிக்கிழமைகளில் மாலை 4 மணி வரை நடத்தப்பட்ட இந்த முகாமிகளில் இரத்த தானம் செய்வதற்காக கிழக்கு மாகாணத்தின் பைஸல்யா, சிஹாத், தம்மாம் ஆகிய பகுதிகளிலிருந்து 260 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் மருத்துவமனை வளாகத்தில் குழுமினர். உடல் தகுதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் முதல் வாரத்தில் 121 யூனிட்களும் இரண்டாவது வாரத்தில் 84 யூனிட்களும் ரத்தம் தானமாக பெறப்பட்டது.

முன்னதாக கலந்து கொண்டவர்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் எண்ணிக்கை போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன.

சவூதியின் கிழக்கு மாகாணம் பகுதிகளில் உள்ள பிற மருத்துவமனைகளோடு இணைந்து இதுவரை 50 இரத்ததான முகாம்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமானோர் இரத்ததானம் செய்ததில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் தொடர்ந்து பல வருடங்களாக முதலிடத்தில் இருந்து பல விருதுகளை பெற்று வருவது அனைவரும் அறிந்ததே.

அது போல, சவுதி அரேபியாவிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரத்த தானம் செய்வதில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. அதற்கான பல்வேறு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் சவூதி அரசின் சுகாதார அமைச்சகத்திலிருந்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற முகாம்கள் மனித நேயத்தை வெளிப்படுத்துவதாகவும் சகோதரத்துவத்தை நிலைநாட்டும் வகையிலும் அமைந்திருந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் மருத்துவமனை ஊழியர்களோடு இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புக்கு:

ஷேக் அன்சாரி (+966500047327)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தம்மாம் மண்டலம் – இரத்த தான பொறுப்பாளர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.