பெங்களூருவில் 7 பேரை திருமணம் செய்து நகை-பணத்தை திருடி சென்றார் கல்யாண ராணிக்கு போலீஸ் வலைவீச்சு




பெங்களூருவில் 7 பேரை திருமணம் செய்து நகை-பணத்தை திருடி சென்ற கல்யாண ராணியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

போலீசில் புகார்

பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் அப்சல். இவர் கே.ஜி.ஹள்ளி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், கே.ஜி.ஹள்ளியை சேர்ந்த யாஸ்மின் பானு (வயது 30) என்பவரை நான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். திருமணம் முடிந்த 2 நாட்கள் அவர் என்னுடன் வாழ்ந்தார். அதன்பிறகு யாஸ்மின் பானு திடீரென்று மாயமாகிவிட்டார். அதே சமயத்தில் எங்கள் வீட்டில் இருந்து நகை-பணத்தை யாஸ்மின் பானு திருடி சென்றுவிட்டார். என்னை திருமணம் செய்வதுபோல நடித்து எங்கள் வீட்டில் இருந்த நகை-பணத்தை அவர் திருடி சென்றுவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கல்யாண ராணிக்கு வலைவீச்சு

போலீசார் விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கே.ஜி.ஹள்ளியை சேர்ந்த யாஸ்மின் பானுவுக்கும், சாராய் பாளையா பகுதியை சேர்ந்த இம்ரான் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக யாஸ்மின் பானுவும், இம்ரானும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர். அப்போது யாஸ்மின் பானு, இம்ரானிடம் இருந்து ரூ.10 லட்சம் ஜீவனாம்சமாக பெற்றுக் கொண்டார். அதன்பின்னர் யாஸ்மின் பானு, 6 பேரை திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

அதாவது, யாஸ்மின் பானு, தனது அழகில் மயங்கி விழும் ஆண்களை காதலிப்பது போல நடித்து அவர்களை திருமணம் செய்வார். பின்னர், திருமணம் முடிந்து 2 நாட்கள் கணவருடன் குடும்பம் நடத்துவதுபோல நடித்து, அவர்களின் வீட்டில் இருந்து நகை-பணத்தை திருடுவதை தொழிலாக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி போலீசார் தலைமறைவாக உள்ள கல்யாண ராணியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.