போயிங்-777 விமானம் ஓட்டிய முதல் இரட்டை சகோதரிகள் - மரியம் மசூத் & ஏர்ரம் மசூத்.



பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் போயிங்-777 விமானம் ஓட்டிய முதல் சகோதரிகள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானை சேர்ந்த சகோதரிகள் மரியம் மசூத் மற்றும் ஏர்ரம் மசூத். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் விமான நிறுவனத்தில் பைலட்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் மூத்தவரான மரியம் மசூத் ஏற்கனவே போயிங் -777 விமானம் ஓட்டுவதற்கான தகுதி பெற்றுள்ளார். தங்கை ஏர்ரம் மசூத்தும் தற்போது போயிங் -777 ஓட்டுவதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானில் முதன்முறையாக ஒரே நேரத்தில் போயிங் -777 விமானம் ஓட்டிய முதல் சகோதரிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.

சகோதரிகள் இருவர் ஒரே எடைபிரிவில் போயிங் -777 விமானம் ஒட்டியதாக முன்பு எங்கும் ஆதாரங்கள் இல்லை என்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் இன்டர்நேஷனல் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தான்யல் கிலானி தெரிவித்தார்.

பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் ‘டான்’ இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.