அதிரை கடலில் சிக்கிய 80 கிலோ எடையில் புள்ளி திருக்கை மீன் ( படங்கள் )தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து உள்ளூர் மீன் மார்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும். அதே போல் அதிராம்பட்டினம் அடுத்து காணப்படும் கடற்கரையோர பகுதிகளாகிய மல்லிபட்டினம், சேதுபாவசத்திரம், கட்டுமாவாடி உள்ளிட்ட துறைமுகங்களில் பிடிக்கப்படும் மீன்கள் அதிராம்பட்டினம் பிரதான மார்க்கெட் என கருதப்படும் கடைத்தெரு பெரிய மார்க்கெட் பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு அதிராம்பட்டினம் கடலில் மீனவர் சங்கர் என்பவரின் வலையில் சிக்கிய புள்ளி திருக்கை மீன் இன்று காலை கடைத்தெரு பெரிய மார்கெட்டிற்கு விற்பனைக்கு வந்தது. சுமார் 80 கிலோ எடை கொண்ட புள்ளி திருக்கை மீனை வாடிக்கையாளர்கள் வியப்புடன் பார்வையிட்டனர். இறுதியில் ரூ 8 ஆயிரத்திற்கு ஏலம் போனது.

இதுகுறித்து அதிராம்பட்டினம் கடைத்தெரு பெரியமார்க்கெட் மீன் வியாபாரி நூர்தீன் கூறுகையில்,
'திருக்கை மீனில் கருந்திருக்கை, முன்டாங்க்கனி திருக்கை, முள்ளந் திருக்கை, ஆடா திருக்கை, குருவி திருக்கை, வலுவாடி திருக்கை, பால் திருக்கை, கொம்பு திருக்கை, பூவா திருக்கை என பலவகை இருக்கிறது. இதில் புள்ளி திருக்கை மீனை அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். திருக்கை மீன் மருத்துவ குணம் வாய்ந்தது. முள் இல்லாதது. குறிப்பாக பாலூட்டும் தாய்மார்களுக்கு பத்திய உணவாக பயன்படுகிறது. மேலும் மீன் எண்ணை தயாரிக்கவும், இதன் செவில்கள் மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது' என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.