87 ஆயிரம் பாலஸ்தீன குழந்தைகளுக்கு பெருநாள் ஆடைகள் வழங்கும் துருக்கி அரசு!உலகில் பரிதாபத்திற்கு உரிய மனிதர்களாக பாலஸ்தீன மனிதர்கள் உள்ளனர்.தங்களது சொந்த மண்ணை இஸ்றேலிடம் பறிகொடுத்து விட்டு பரிதவித்து கொண்டுள்ளனர்.

இஸ்றேலுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் இஸ்றேலின் அடக்கு முறைகளால் அவர்கள் சோர்ந்து விட வில்லை என்றாலும் அவர்களின் பொருளாதாரம் அதலபாதளத்தில் இருக்கிறது.

சகோதர அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் உதவியையே அவர்கள் பல்வேறு கட்டங்களில் எதிர்பார்த்து நிற்க்க வேண்டிய நிலை உள்ளது.

எதிர் வரும் தியாக திருநாளில் தங்கள் குழந்தைகளின் முகத்தில் புன்னகையை வர வழைக்க பொன்னகை வாங்கா விட்டாலும் புத்தாடையாவது வாங்க வேண்டும் என்று எண்ணும் அவர்கள் அதற்கும் வாய்ப்பின்றி வருந்துகின்றனர்.

இந்த நிலையை அறிந்து கொண்ட துருக்கி அரசு காஸா பகுதியில் உண்டான 87 ஆயிரம் பலஸ்தீன ஏழை குழந்தைகளுக்கும் துருக்கி அரசின் சார்பில் தியாக திருநாள் புத்தாடைகள் வழங்க படும் என்று அறிவித்து, அதை நடை முறைபடுத்தவும் ஆரம்பித்து விட்டது.

ஆம், இன்று முதல் அந்த பணியை தொடங்கிய துருக்கியின் தொண்டு நிறுவனங்கள் துருக்கி அரசு அறிவித்தது போல் காஸா பகுதியில் உண்டான அனைத்து குழந்தைகளுக்கும் ஓரிரு நாளில் புத்தாடை வழங்கி முடிக்க படும் என அறிவித்திருக்கிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.