உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் கத்தார் முதலிடம், இந்தியா 95வது இடம்!



ஐ.நா வின் The Institute for Environment and Human Security மொத்தம் 171 நாடுகளில் பாதுகாப்பான நாடுகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முதல் மூன்று இடங்களை கத்தார், மால்டா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. இந்தியா 95வது இடத்திலும், பாகிஸ்தான் 100வது இடத்திலும், சீனா 87 வது இடத்திலும் இருக்கின்றன. பலராலும் பெரிதும் வளர்ச்சியடைந்து நாடு என்று கருதப்படும் அமெரிக்க வெறும் 45வது இடத்தில் தான் இருக்கின்றது.

இந்த தர வரிசையில் மிகவும் பாதுகாப்பற்ற நாடுகள் என்று வனுஆடு, டோங்கா, பிலிப்பைன்ஸ், குவாடெமாலா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உள்ளன.

இந்த அறிக்கையின் படி இயற்க்கை பேரழிவுகளான சுனாமி, நில நடுக்கம், எரிமலை சீற்றம், தீ விபத்து, வெள்ளங்கள், போன்றவை மக்களின் பாதுகாப்பை குறைக்கும் என்றும் இது போன்ற இயற்க்கை சீற்றங்களுடன் சுற்றுச்சூழல் மற்றும் மனித ஈடுபாடு, உதவி மையங்கள் மற்றும் ஆபத்து காலங்களில் உதவிகளை விரைந்து கொடுக்கும் தன்மை, குடிமக்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த அறிக்கை உருவாக்கப் பட்டுள்ளதாக இதன் திட்ட மேலாளர் பீட்டர் மியுக் தெரிவித்துள்ளார்.

தங்களது குடிமக்களுக்கு பாதுகாபற்ற மிகவும் குறைந்த வசதிகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் 15 நாடுகள் உளளன என்றும் அதில் 13 நாடுகள் ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ளது என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. ஆபிரிக்காவில் மருத்துவ மற்றும் சாலை வசதிகள் போன்ற போதுமான கட்டமைப்பு இல்லாலதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
முழு அறிக்கையை பதிவிறக்கம் செய்ய: இங்கே கிளிக் செய்யவும்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.