தியாகத் திருநாளில் மூன்று பேர் உயிரிழந்தனர்கஷ்மீரில் தியாகத் திருநாள் அன்று போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு ஊரடங்கு உத்தரவின் போது பெருநாள் கொண்டாட்டங்கள் நடைபெறுவது இருபது வருடங்கள் கழித்து இதுவே முதல் முறை.
ஐக்கிய நாடுகளின் ராணுவ கண்காணிப்பகத்தை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் தடுத்துள்ளனர். இதில் ஏற்பட்ட மோதலில் இரண்டு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகவும், 45 வயதான ஜலாலுதீன் என்பவர் பள்ளிவாசலில் கண்ணீர் புகை குண்டு தாக்குதலினால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் 24 வயதான ஷஹித் அஹமத் பாதுகாப்பு படையினரால் பெல்லட் குண்டுகளால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கஷ்மீரில் பிரிவினைவாதிகள் ஈத் தொழுகைக்கு பிறகு வன்முறை நிகழ்த்தவிருக்கிறார்கள் என்று கூறி ஈத் கொண்டாட்டங்களை பாதுகாப்பு படையினர் இவ்வருடம் தடை செய்துள்ளனர். 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு இது போன்று நடப்பது இதுவே முதல் முறை. இதனால் தங்களது இரு பண்டிகைகளில் ஒன்றான தியாகத் திருநாளில் முஸ்லிம்கள் தங்களது உற்றார் உறவினர்களை சந்தித்து அன்பை பரிமாறிக் கொள்வதும் தடைபட்டு போயுள்ளது. பலர் பாதுகாப்பு படையினரால் தாக்கப்படலாம் என்று அச்ச உணர்வின் காரணமாக தங்களது வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. கஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும் பகுதிகளில் பெருநாள் கொண்டாட்டங்களுக்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை என்று தெரியவருகிறது.
Share this:
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.