துபாய் மெட்ரோவுடன் இணைக்கப்படும் இப்னு பதூதா மால் !14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்னு பதூதா என்கிற மொராக்கோ நாட்டு அரபியர் சுமார் 20 வருடங்கள் வீட்டை விட்டு வெளியேறி உலகத்தை சுற்றி வந்து எழுதிய பயணக்குறிப்புகளை கருப்பொருளாக கொண்டு துபாயில் கட்டியெழுப்பப்பட்ட 'இப்னு பதூதா மால்' துபாய்வாசிகள் மத்தியிலும், சுற்றுலாவாசிகள் மத்தியிலும் பிரசித்தி பெற்ற ஒன்றாக திகழ்கிறது.

இப்னு பதூதா பெயரில் அமைந்துள்ள, வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துச் சொல்லும் இந்த மாலில் சுமார் 400 கடைகளும், உணவகங்களும், இன்ன பிற நிறுவனங்களும் இயங்குகின்றன. தற்போது மேலும் ஒரு 5 நட்சத்திர ஹோட்டலுடன் 60 சில்லறை விற்பனை கடைகளும், உணவகங்களும், திரையரங்குகளும் அமைக்கப்பட உள்ளன.

ஆண்டுக்கு சுமார் 20 மில்லியன் வருகையாளர்களால் நிரம்பி வழியும் இந்த இப்னு பதூதா மாலுக்குள் செல்ல மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து 210 மீட்டருக்கு நடைபாலம் (Walkway) அமைக்கப்படுகிறது (ஏற்கனவே மால் ஆப் தி எமிரேட்ஸில் உள்ளது போல்). இந்தப் நடை பாலத்தை பயன்படுத்தி மெட்ரோ பயணிகளை போலவே RTA பஸ் பயணிகளும் பயனடையலாம் என்பதால் பயணாளிகளின் சிரமம் வெகுவாக குறையும்.

வரலாற்றுத் தகவல்:
இப்னு பதூதா அவர்கள் டெல்லியை ஆண்ட முஹமது பின் துக்ளக் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கு வந்தவர் மேலும் துக்ளக் அரசவையில் மிகக்குறுகிய காலம் 'காஸி' எனும் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

பின் குஜராத் வழியாக கேரளம் வந்து பின் மாலத்தீவுகளுக்கு சென்றவர். அதன் பின் ஸ்ரீ லங்கா வழியாக மதுரைக்கு வந்த சமயம் கியாஸூத்தீன் முஹமது தம்கானி என்ற சுல்தான் சிறிது காலம் மதுரையை ஆண்டுள்ளார் என வரலாற்று குறிப்புகள் கூறுகிறது.

Source: Emirates 247
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.