இளம்பெண்ணின் உயிரை பறித்த துப்பட்டா..! சென்னை சோகம்!தோசைக்கு மாவு அரைத்தபோது, இளம்பெண்ணின் துப்பட்டா கிரைண்டரில் சிக்கியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் ஹெப்சிபா (24). இவர், அமைந்தகரை ரசாக் கார்டன் பகுதியில் தனியார் கேன்டினில் வேலைப்பார்த்து வந்தார். நேற்று ஹெப்சிபா, தோசைக்கான மாவை, கிரைண்டரில் அரைத்துள்ளார். அப்போது, அவரது துப்பட்டா கிரைண்டரில் சிக்கியது. இதை அவர் கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் கிரைண்டர் சுற்றிய வேகத்தில் துப்பட்டாவும் அதில் சிக்கி சுற்ற ஆரம்பித்தது. இதில் அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததோடு, துப்பட்டாவைப் பிடித்து இழுத்தார். 'காப்பாற்றுங்கள்' என்று அவர் அலறிய சப்தம் யாருக்கும் கேட்கவில்லை.

இதற்குள் துப்பட்டா, ஹெப்சிபாவின் கழுத்தை இறுக்கியது. எதேச்சையாக இதைப்பார்த்த கேன்டினில் பணியாற்றும் சக ஊழியர்கள் உடனடியாக கிரைண்டரை ஆப் செய்தனர். உயிருக்குப் போராடிய ஹெப்சிபாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அமைந்தகரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

துப்பட்டாவால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.மகேஷ்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.